போட்டி நிறுவனங்களை மிரள வைத்த டாடா... மஹிந்திரா, ஹூண்டாய் எல்லாம் 10 அடி பின்னாலதான் நிக்கணும்...

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் குளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி அமைப்புகளின் மோதல் சோதனைகளில் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருப்பதுதான், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற இந்தியாவின் முதல் கார் என்ற பெருமை டாடா நெக்ஸானுக்கு உண்டு. இதற்கு பிறகுதான் மற்ற கார்கள் எல்லாம் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் சிறப்பாக செயல்பட தொடங்கின. இதற்கு பிறகுதான் பாரத் என்சிஏபி போன்ற அமைப்புகள் எல்லாம் உருவாக்கவேபட்டன.

Tata Altroz Side Design

எனவே பாதுகாப்பில் ஒரு முன் மாதிரியை உருவாக்கிய நிறுவனம் என்ற பெருமை டாடாவிற்கு உண்டு. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களின் விற்பனை இதன் காரணமாகவே ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகின்றன. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் விதிவிலக்கு அல்ல.

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக 57,688 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 45,130 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

Tata Altroz

அதாவது இம்முறை 12,558 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் 27.83 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமான கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் வழக்கம் போல் மாருதி சுஸுகி நிறுவனம் முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் மஹிந்திரா நிறுவனம் 3வது இடத்திலும், ஹூண்டாய் நிறுவனம் 4வது இடத்தையும், டொயோட்டா நிறுவனம் 5வது இடத்தையும் பிடித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதில், டாடா டியாகோ மிகவும் முக்கியமான ஒன்றாகும். டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அத்துடன் டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

Article Published On: Tuesday, May 5, 2026, 18:10 [IST]
English summary
Tata cars sales report april 2026 28 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+