டாடா பார்த்து பார்த்து உருவாக்கிய காரை வாங்குறவங்க குறைஞ்சிக்கிட்டே வராங்க! இருந்தாலும் 50 ஆயிரம் கார் விற்பனை

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், 2025 டிசம்பரில் உள்நாட்டு சந்தையில் 50,046 கார்களை விற்று, 2024 டிசம்பரை காட்டிலும் 13.17% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஏனெனில், முந்தைய ஆண்டு டிசம்பரில் 44,221 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. நெக்ஸான் (Nexon) மற்றும் பன்ச் (Punch) போன்ற அதன் முக்கிய எஸ்யூவி (SUV) கார் மாடல்களின் வலுவான தேவை இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இருப்பினும் 2025 நவம்பரை மாதத்தை காட்டிலும் டாடா கார்களின் விற்பனை குறைந்தாலும், ஆண்டின் முடிவில் டாடா மோட்டார்ஸ், மாருதி (Maruti) மற்றும் மஹிந்திராவுக்கு (Mahindra) அடுத்தப்படியாக நாட்டின் பயணிகள் வாகன சந்தையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக நெக்ஸான்/ நெக்ஸான் இ.வி (Nexon/ Nexon EV) 19,375 யூனிட்கள் விற்பனை உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

tata cars-wise sales report

ஆனால், 2024 டிசம்பரில் 13,536 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இந்த பிரபலமான டாடா காரின் விற்பனை 43.14% அதிகரித்துள்ளது. நெக்ஸானுக்கு அடுத்து, பன்ச்/ பன்ச் இ.வி (Punch/ Punch EV) 15,980 யூனிட்கள் விற்பனை உடன் அடுத்த இடத்தில் உள்ளது.

இது 6.02% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்து, அதன் நிலையான விற்பனைப் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. டியாகோ/டியாகோ இ.வி (Tiago/Tiago EV) சீரிஸ் 5,826 யூனிட்கள் விற்பனையுடன் 16.38% வளர்ச்சியையும், அல்ட்ராஸ் (Altroz) 2,871 யூனிட்கள் விற்பனையுடன் 53.86% வலுவான வளர்ச்சியையும் அடைந்துள்ளன.

tata cars-wise sales report

பெரிய எஸ்யூவி கார்கள் பிரிவில், ஹாரியர்/ ஹாரியர் இ.வி (Harrier/ Harrier EV) 2,378 யூனிட்களுடன் 81.94% எனும் அற்புதமான வளர்ச்சியை கடந்த டிசம்பரில் பெற்றுள்ளது. ஆனால், சஃபாரி (Safari) 1,446 யூனிட்களுடன் 4.40% சொற்ப வளர்ச்சியையே பதிவு செய்தது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சியரா (Sierra), டிசம்பர் மாதத்தில் 291 யூனிட்களுடன் விற்பனைப் பட்டியலில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளது.

மறுப்புறம், கர்வ்/ கர்வ் இ.வி (Curvv/ Curvv EV) விற்பனை 1,104 யூனிட்களாகக் குறைந்து, 77.89% ஆண்டுக்கு ஆண்டு சரிவைச் சந்தித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் பார்த்து, பார்த்து உருவாக்கி கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்த கர்வ் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பது அதன் விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரிய வருகிறது.

tata cars-wise sales report

இதேபோல், டிகோர்/டிகோர் இ.வி (Tigor/Tigor EV) 775 யூனிட்கள் விற்பனையுடன் 26.47% ஆண்டுக்கு ஆண்டு சரிவைச் சந்தித்துள்ளது. 2025 நவம்பர் மாதத்தில் 57,436 கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ், அதனுடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் 12.87% விற்பனை சரிவைக் கண்டுள்ளது. நெக்ஸான், பன்ச், ஹாரியர் உள்ளிட்ட பெரும்பாலான டாடா கார்கள் இந்த சரிவைச் சந்தித்துள்ளன.

No Tata Dec-25 Dec-24 Diff Growth % YoY % Share Dec 25
1 Nexon / EV 19,375 13,536 5,839 43.14 38.71
2 Punch / EV 15,980 15,073 907 6.02 31.93
3 Tiago / EV 5,826 5,006 820 16.38 11.64
4 Altroz 2,871 1,866 1,005 53.86 5.74
5 Harrier / EV 2,378 1,307 1,071 81.94 4.75
6 Safari 1,446 1,385 61 4.40 2.89
7 Curvv / EV 1,104 4,994 -3,890 -77.89 2.21
8 Tigor / EV 775 1,054 -279 -26.47 1.55
9 Sierra 291 0 291 - 0.58
- Total 50,046 44,221 5,825 13.17 100.00

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நவம்பரை காட்டிலும் டிசம்பரில் டாடா கார்கள் விற்பனை குறைந்திருப்பது, வழக்கமான ஆண்டு இறுதி மந்தநிலை மற்றும் சரக்கு சரிசெய்தல்களைக் (inventory adjustments) குறிக்கிறது. இருப்பினும், டிகோர்/டிகோர் இ.வி மட்டும் 58.81% வளர்ச்சியுடன் தனித்து நிற்கிறது. மொத்தத்தில், 2025 டிசம்பரில் டாடா மோட்டார்ஸின் விற்பனை, எஸ்யூவி மாடல்களை மையமாகக் கொண்ட அதன் வலிமையான போர்ட்ஃபோலியோவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

புதிய டாடா சியரா மாடலின் டெலிவரிகள் இந்த வாரம் முதல் தொடங்கவுள்ள நிலையில், சந்தையில் அதற்கு வலுவான ஆர்வம் நிலவுகிறது. இது வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸின் விற்பனை வேகத்தை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 2026இல் டாடா தனது வலுவான எஸ்யூவி கார்கள் வரிசையை மேலும் பலப்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 12, 2026, 10:42 [IST]
English summary
Tata cars wise sales report of december 2025 nexon and punch top on list
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X