சத்தியமா இதை யாரும் எதிர்பார்க்கல... கார்கள் விற்பதில் ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து தாக்கிய டாடா மோட்டார்ஸ்!!
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் (Tata Motors Passenger Vehicles) நிறுவனம் 2026 ஜனவரியில் உள்நாட்டு விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2026 ஜனவரி மாதத்தில் மொத்தம் சுமார் 70,222 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டு, 2025 ஜனவரியின் 48,075 டாடா கார்கள் விற்பனை உடன் ஒப்பிடுகையில் 46.07% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதேநேரம், 2025 டிசம்பரை விட 40.31% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் எஸ்யூவி கார்கள் (SUV Cars) மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-இன் நிலையான தேவையைக் காட்டுகிறது. டாடா விற்பனையில் நெக்ஸான் (Nexon) மற்றும் நெக்ஸான் இவி (EV) கார்கள் முன்னணியில் உள்ளன.

கடந்த ஜனவரியில் 23,365 நெக்ஸான் கார்களை விற்று, 2025 ஜனவரியை விட 51.75% மற்றும் 2025 டிசம்பரை விட 20.59% வளர்ச்சியை டாடா பதிவு செய்துள்ளது. இது நெக்ஸானை இந்தியாவின் முன்னணி காம்பாக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகத் திகழ வைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த ஜனவரி மாத்தில், அனைத்து நிறுவனங்களின் கார்களை விடவும் அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது.
நெக்ஸானுக்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான டாடா காராக பன்ச் (Punch) மற்றும் பன்ச் இவி கார் மாடல்கள் இணைந்து 19,257 யூனிட்டுகளுடன் 2025 ஜனவரியை விட 18.64% மற்றும் 2025 டிசம்பரை விட 20.51% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. டாடா-வின் என்ட்ரி-லெவல் எஸ்யூவி கார்களுக்கான தொடர் தேவையைக் இது காட்டுகிறது.

டியாகோ (Tiago) மற்றும் டியாகோ இவி 8,349 யூனிட்கள் விற்பனை உடன் 2025 ஜனவரியை விட 22.65% மற்றும் 2025 டிசம்பரை விட 43.31% அதிக விற்பனையை பெற்றுள்ளன. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட சியரா (Sierra), முதல் முழு மாத விற்பனையில் 7,003 யூனிட்டுகள் விற்பனையை பதிவு செய்து, டாடாவுக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளது.
டாடாவின் பெரிய எஸ்யூவி கார்களில், ஹாரியர் (Harrier) மற்றும் ஹாரியர் இவி விற்பனை 3,711 யூனிட்டுகளாக உயர்ந்து, 2025 ஜனவரியை விட 149.40% மற்றும் 2025 டிசம்பரை விட 56.06% எனப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளன. சஃபாரி (Safari) கடந்த மாதத்தில் 2,375 யூனிட்டுகள் விற்பனை உடன் 2025 ஜனவரியை விட 53.42% மற்றும் 2025 டிசம்பரை விட 64.25% விற்பனையில் வளர்ந்துள்ளது.

அல்ட்ராஸ் (Altroz) என்கிற டாடாவின் ஹேட்ச்பேக் கார் கடந்த மாதத்தில் 3,135 யூனிட்டுகள் விற்பனை உடன் 2025 ஜனவரியை விட 54.21% வளர்ச்சியை அடைந்துள்ளது. கர்வ் (Curvv) மற்றும் கர்வ் இவி இரண்டும் மொத்தம் 1,666 யூனிட்டுகள் விற்பனையை பதிவு செய்துள்ளன. டிகோர் (Tigor) மற்றும் டிகோர் இவி 1,361 யூனிட்டுகள் விற்கப்பட்டு 2025 டிசம்பரை விட விற்பனையில் மீட்சியைக் காட்டியுள்ளன.
| No | Tata | Jan-26 | Jan-25 | Diff | Growth % YoY | % Share Jan 26 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Nexon / EV | 23,365 | 15,397 | 7,968 | 51.75 | 33.27 |
| 2 | Punch / EV | 19,257 | 16,231 | 3,026 | 18.64 | 27.42 |
| 3 | Tiago / EV | 8,349 | 6,807 | 1,542 | 22.65 | 11.89 |
| 4 | Sierra | 7,003 | 0 | 7,003 | - | 9.97 |
| 5 | Harrier / EV | 3,711 | 1,488 | 2,223 | 149.40 | 5.28 |
| 6 | Altroz | 3,135 | 2,033 | 1,102 | 54.21 | 4.46 |
| 7 | Safari | 2,375 | 1,548 | 827 | 53.42 | 3.38 |
| 8 | Curvv / EV | 1,666 | 3,087 | -1,421 | -46.03 | 2.37 |
| 9 | Tigor / EV | 1,361 | 1,484 | -123 | -8.29 | 1.94 |
| - | Total | 70,222 | 48,075 | 22,147 | 46.07 | 100.00 |
| No | Tata | Jan-26 | Dec-25 | Diff | Growth % MoM | % Share Dec 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Nexon / EV | 23,365 | 19,375 | 3,990 | 20.59 | 38.71 |
| 2 | Punch / EV | 19,257 | 15,980 | 3,277 | 20.51 | 31.93 |
| 3 | Tiago / EV | 8,349 | 5,826 | 2,523 | 43.31 | 11.64 |
| 4 | Sierra | 7,003 | 291 | 6,712 | 2306.53 | 0.58 |
| 5 | Harrier / EV | 3,711 | 2,378 | 1,333 | 56.06 | 4.75 |
| 6 | Altroz | 3,135 | 2,871 | 264 | 9.20 | 5.74 |
| 7 | Safari | 2,375 | 1,446 | 929 | 64.25 | 2.89 |
| 8 | Curvv / EV | 1,666 | 1,104 | 562 | 50.91 | 2.21 |
| 8 | Tigor / EV | 1,361 | 775 | 586 | 75.61 | 1.55 |
| - | Total | 70,222 | 50,046 | 20,176 | 40.31 | 100.00 |
Table Source: Autopunditz
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்தத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடந்த 2026 ஜனவரி மாத விற்பனை ஆனது அதன் பெட்ரோல்/டீசல் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எஸ்யூவி கார்களின் பலத்தை காட்டுகிறது. நெக்ஸான், பன்ச் மற்றும் சியரா போன்ற கார் மாடல்கள் விற்பனையை உயர்த்துவதில் முக்கியப் பங்கை வகித்தன. குறிப்பாக, நெக்ஸான் கார்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் திடீரென கிடைத்த அதிகப்படியான வரவேற்பு தான் டாடா மோட்டார்ஸை ஒரேடியாக உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications









