3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி விலையில் இந்த டாடா எலெக்ட்ரிக் காரை சொந்தமாக்கலாம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருந்து வருகிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்த நிலையில் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு கற்பனை செய்ய முடியாத வகையிலான சலுகைகளை டாடா மோட்டார்ஸ் இந்த மாதம் வழங்கியிருக்கிறது.

ஆம், இந்தியாவில் டாடா விற்பனை செய்து வரும் கர்வ் EV கூபே வகை எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு சுமார் 3.35 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடி இந்த ஜூலை மாதம் வழங்கப்படுகிறது. 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட ஒரு காருக்கு இவ்வளவு தள்ளுபடி அறிவிப்பது மிகவும் அரிதாகும்.

Tata Curvv EV

கர்வ் EV காருக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு குறைவாக இருப்பதையடுத்தே இவ்வளவு அதிக சலுகைகளை அந்தக் காருக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த சலுகைகளானது தற்போது தயாரிக்கப்படும் கர்வ் EV கார்களுக்குப் பொருந்தாது. கடந்த மே மாதம் கர்வ் EV X சீரிஸை வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். இந்த X சீரிஸுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு விற்பனையாகாமல் இருக்கும் கார்களுக்கே பொருந்தும்.

அதிகம் வரவேற்பில்லாத காரணத்தினால் கர்வ் EV-யின் X சீரிஸ் லைன்-அப்பை வெறும் இரண்டு வேரியன்ட்களாக டாடா மோட்டார்ஸ் குறைத்துவிட்டதோடு, இவற்றை முன்பை விடக் குறைவான விலையிலேயே அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முந்தைய மாடலானது சற்று கூடுதல் விலையைக் கொண்டிருந்தாலும், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகளுடன் மிகவும் குறைவான விலையிலேயே வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

Tata Curvv EV

X சீரிஸுக்கு முந்தைய கர்வ் EV வேரியன்ட்களானது 17.49 லட்சம் ரூபாய் முதல் 22.24 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. அவற்றையே மேலே கூறியது போல 3.35 லட்சம் ரூபாய் வரையிலான சலுகையுடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த சலுகையானது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தயாரிப்பில் இருக்கும் கர்வ் EV மாடல் தான் வேண்டும் என்றால், அக்காம்ப்ளிஷ்டு X மற்றும் எம்பவர்டு X ஆகிய இரண்டு வேரியன்ட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். முந்தைய கர்வ் EV-யைப் போல இல்லாமல், இந்த X சீரிஸின் இரண்டு வேரியன்ட்களிலுமே பெரிய 55 kWh பேட்டரி பேக் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் அக்காம்பிளிஷ்டு X வேரியன்டை 16.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், எம்பிவர்டு X வேரியன்டை 19.19 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வாங்கலாம். இத்துடன் எம்பவர்டு X டார்க் எடிஷனும் 19.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கர்வ் EV-யின் 55 kWh பேட்டரி பேக்குடன், 167 hp பவர் மற்றும் 215 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருப்பதோடு, இந்த பவர்ட்ரெயினானது 585 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. முந்தைய கர்வ் EV காரானது 502 கிமீ ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய 45 kWh பேட்டரி பேக் தேர்வையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கர்வ் EV-யை அல்லது டாடாவின் எலெக்ட்ரிக் காரை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இந்த கர்வ் EV-யையும் முயற்சி செய்யலாம். பவர்ட்ரெயின் மற்றும் வசதிகளைப் பொறுத்தவரை மற்ற டாடா எலெக்ட்ரிக் கார்களில் இருப்பது தான் கர்வ் EV-யிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே பெரிய பின்னடைவு எதுவும் இருக்காது. ஆனால் குறைவான விலையிலேயே இந்தக் காரை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும் ஒரு டெஸ்ட் டிரைவுக்குப் பின்னர் முடிவெடுங்களேன்.

Article Published On: Tuesday, July 7, 2026, 12:33 [IST]
English summary
Tata curvv ev july month discounts announced upto 3 lakhs
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out