502 கிமீ ரேஞ்சு கொண்ட புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கிய டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னிலையில் இருந்து வருகிறது டாடா மோட்டார்ஸ் (Tata Motors). அந்நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் முக்கியமான ஒரு மாடலாக இருந்து வருகிறது கர்வ் EV (Curvv EV). இந்த எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி மாடலினை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு இலகுவாக்கும் பொருட்டு குறைவான விலை கொண்ட புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

இதுவரை கிரியேட்டிங், அக்காம்ப்ளிஷ்டு, அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் S, எம்பவர்டு பிளஸ், எம்பவர்டு பிளஸ் A ஆகிய வேரியன்ட்களாக கர்வ் EV விற்பனை செய்யப்பட்டு வந்தது. 45 kWh மற்றும் 55 kWh என இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளை இந்த எஸ்யூவியில் டாடா கொடுத்து வருகிறது. இதில் 45 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியன்டானது ரூ.17.45 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Tata Curvv EV

அதேபோல், 55 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியன்டானது ரூ.19.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கர்வ் EV மாடலின் தொடக்கவிலையைக் குறைக்கும் பொருட்டு, அக்காம்ப்ளிஷ்டு X (Accomplished X) மற்றும் எம்பவர்டு X (Empowered X) ஆகிய புதிய வேரியன்ட்களை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இத்துடன் எம்பவர்டு X டார்க் எடிஷன் வேரியன்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இனி கர்வ் லைன்-அப்பில் புதிய அக்காம்ப்ளிஷ்டு X வேரியன்ட் தான் விலை குறைவான தொடக்க நிலை வேரியன்டாக இருக்கப் போகிறது. இதனை ரூ.16.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் டாடா வெளியிட்டுள்ளது. இதில் இன்னுமொரு சூப்பர் விஷயம் என்னவென்றால், இந்த வேரியன்ட் 55 kWh என்ற பெரிய பேட்டரி பேக்கைக் கொண்டிருப்பது தான்.

Tata Curvv EV

இதற்கு முன்பு வரை ரூ.19.25 லட்சம் செலவு செய்தால் தான் 55 kWh பேட்டரி பேக் கொண்ட கர்வ் EV மாடலை நாம் வாங்க முடியும். ஆனால் தற்போது புதிய வேரியன்டின் வெளியீட்டோடு, ரூ.2.25 லட்சம் வரை குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே பெரிய பேட்டரி பேக் கொண்ட, அதிக ரேஞ்சு கொண்ட கர்வ் EV மாடலை நாம் வாங்கலாம்.

எம்பவர்டு X வேரியன்டையும் 55 kWh பேட்டரி பேக்குடன் ரூ.19.19 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எம்பவர்டு X டார்க் எடிஷன் வேரியன்டை ரூ.19.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். தொடக்க நிலையில் இருக்கும் கிரியேட்டிவ், அக்காம்ப்ளிஷ்டு மற்றும் அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் (S) ஆகிய மூன்று வேரியன்ட்கள் மட்டுமே 45 kWh என்ற சிறிய பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. மற்ற அனைத்து வேரியன்ட்களிலும் 55 kWh என்ற பெரிய பேட்டரி பேக் தேர்வே கொடுக்கப்பட்டிருக்கிறது.

55 kWh பேட்டரி பேக் தேர்வு கொண்ட வேரியன்ட்களில் 167 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்பானது 502 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கிறது. 45 kWh பேட்டரி பேக்கானது 150 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டிருப்பதுடன் 430 கிமீ வரையிலான ரேஞ்சையும் கொடுக்கிறது.

இரண்டு பவர்ட்ரெயின் செட்டப்புகளிலும் டார்க் 215 Nm தான். 7.2 kW AC சார்ஜருடன் 55 kWh பேட்டரி பேக்கை 10-100% வரை 7.6 மணி நேரத்திலும், சிறிய பேட்டரி பேக்கை 7.25 மணி நேரத்திலும் சார்ஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ். இதுவே DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10-80% வரை 40 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்ய முடியுமாம்.

அக்காம்ப்ளிஷ்டு X வேரியன்டில், பனோரமிக் சன்ரூஃப், டூயல் 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள், 360 டிகிரி கேமரா, பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், ரியர் சன்ஷேடு ஆகிய மேம்பட்ட வசதிகளைக் கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். எம்பவர்டு X வேரியன்டில் கூடுதலாக 6 வே பவர்டு டிரைவர் சீட், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட JBL சவுண்டு சிஸ்டம், 20 வகையான ADAS வசதிகள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் எலெக்ட்ரிக் கார்களிலேயே குறைவாக விற்பனையாகும் கார் என்றால் டாடாவின் கர்வ் EV தான். எனவே அதன் விற்பனையை அதிகரிக்க, வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலை தேர்வைக் கொடுக்கும் பொருட்டு புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். தொடக்கநிலை வேரியன்டாக இருந்தாலும் அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட காராகவே புதிய கர்வ் EV வேரியன்ட்கள் இருக்கிறது. எனவே புதிய வேரியன்ட்களையும் வாங்கும் போது பரிசீலனை செய்யலாம்.

Article Published On: Monday, May 4, 2026, 16:49 [IST]
English summary
Tata curvv ev new variants launched in india check all details here
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+