பெருசா யாரும் கண்டுக்காம இருந்த காரை வேற லெவலுக்கு மாற்றிய டாடா! முதல் மாருதி எலெக்ட்ரிக் காருக்கு சவாலாக!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கர்வ்.இவி (Curvv.ev) அறிமுகம் செய்யப்பட்டது. டாடாவின் லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்றான கர்வ்.இவி, நெக்ஸான்.இவி (Nexon.ev) எலெக்ட்ரிக் காரை போன்று பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்வ்.இவி கார்களின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் வேறு மாதிரியாக பதிவாகி வருகிறது.

இருப்பினும், கர்வ்.இவி ஒரு நாள் மார்கெட்டில் நிச்சயம் வெற்றிப் பெறும் என நம்பும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவ்வப்போது இந்த காரை மேம்படுத்தும் பணிகளில் ஈடுப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் கர்வ்.இவி எலெக்ட்ரிக் காரை 'கர்வ்.இவி சீரிஸ் எக்ஸ்' (Curvv.ev SeriesX) என்கிற பெயருக்கு மாற்றி மேம்படுத்தி டாடா அறிமுகம் செய்துள்ளது.

tata curvv ev seriesx electric car upgrades

அத்துடன், காரில் ஏகப்பட்ட புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சரியாக சொல்ல வேண்டுமென்றால், பேட்டரியின் அளவு அதிகரிக்கப்பட்டு, விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.16.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கர்வ்.இவி சீரிஸ் எக்ஸ் காரின் முக்கிய மூன்று சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பேட்டரி (Battery): சிறிய அளவிலான 45kWh பேட்டரி ஆப்ஷன் புதிய கர்வ்.இவி சீரிஸ் எக்ஸ் காருக்கு வழங்கப்படவில்லை. 55kWh பேட்டரி ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும், அக்கம்ப்ளிஷ்டு எக்ஸ் (Accomplished X), எம்ப்வர்டு எக்ஸ் (Empowered X) மற்றும் எம்ப்வர்டு எக்ஸ் டார்க் எடிஷன் (Dark Edition) என்கிற மூன்று வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

tata curvv ev seriesx electric car upgrades

55kWh பேட்டரியை பெற்றுவந்த கர்வ்.இவி எலெக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்கள் எதுவும் கர்வ்.இவி சீரிஸ் எக்ஸ் காருக்கு வழங்கப்படவில்லை. 55kWh பேட்டரி உடன் இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 164 பிஎச்பி மற்றும் 215 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.

மேற்கூறப்பட்ட மூன்று வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) முறையே ரூ.16.99 லட்சம், ரூ.19.19 லட்சம் மற்றும் ரூ.19.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், முன்பு கர்வ்.இவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது இதைவிட ரூ.50,000 அதிகமாக ரூ.17.49 லட்சமாக இருந்தது. இத்தனைக்கும் 'க்ரியேட்டிவ்' (Creative) என்கிற பெயரில் வழங்கப்பட்டு வந்த அந்த வேரியண்ட்டில் 45kWh பேட்டரி வழங்கப்பட்டது.

புதிய கலர் ஆப்ஷன் (Colour Option): புதிய கர்வ்.இவி சீரிஸ் எக்ஸ் காரில் 'நிட்ரோ கிரிம்சன்' (Nitro Crimson) என்கிற புதிய கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இல்லாமல், கர்வ்.இவி எலெக்ட்ரிக் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த கலர் ஆப்ஷன்களிலும் புதிய கர்வ்.இவி சீரிஸ் எக்ஸ் கிடைக்கும்.

இதன்படி, எம்பவர்டு ஆக்சைடு (Oxide), பிரிஸ்டைன் வெள்ளை (Pristine White), விர்டியூவல் சன்ரைஸ் (Virtual Sunrise) மற்றும் பியூர் கிரே (Pure Grey) உள்ளிட்ட நிறங்களில் கர்வ்.இவி சீரிஸ் எக்ஸ் கிடைக்கும். விலையுயர்ந்த எம்ப்வர்டு எக்ஸ் டார்க் எடிஷன் ஆனது பெயருக்கேற்ப முழுவதும் பளபளக்கும் கருப்பு நிறத்தில் கிடைக்கும்.

உத்தரவாதம்: கர்வ்.இவி சீரிஸ் எக்ஸ் காருக்கு முழு ஆயுட்கால உத்தரவாதத்தை டாடா மோட்டார்ஸ் வழங்கியுள்ளது. கார்களுக்கு ஆயுட்காலமாக மத்திய அரசு 15 வருடங்களை கருதுவதால் 15 வருடங்களுக்கு முழு ஆயுட்கால உத்தரவாதத்தை வழங்குவதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 15 வருடங்களுக்கு பிறகு காரை முறையாக அழித்து சுற்றுச்சூழலை மக்கள் காக்க வேண்டும் என்பது மத்திய அரசின் வலியுறுத்தலாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின்படி பார்க்கும்போது, கர்வ்.இவி எலெக்ட்ரிக் காரை பெரிய பேட்டரி உடன் அதிக இயக்க ஆற்றலை பெறும் எலெக்ட்ரிக் காராக டாடா மோட்டார்ஸ் மாற்றியுள்ளது. அதேநேரம், காரின் ஆரம்ப விலையை ரூ.50,000 அளவிற்கு குறைத்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது. ஆதலால், வரும் மாதங்களில் இந்த டாடா எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் பலர் வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Wednesday, May 6, 2026, 15:13 [IST]
English summary
Tata curvv ev series x electric car upgrades battery colour option warranty check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+