டாடா டெமோ கார்கள் விற்பனைக்கு வருது! கிட்டத்தட்ட பாதி விலைக்கு வாங்கலாம்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஒன்று தனதுவாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்ய பயன்படுத்திய டெமோ கார்களை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக அதிக தள்ளுபடியை குறிப்பிட்ட காருக்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரியு அளவில் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்களை வைத்துள்ளது. இந்த ஷோரூம்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் ஓட்டிப்பார்க் டெஸ்ட் டிரைவ் கார்களை வைத்திருக்கும். இந்த கார்களை டெமோ கார்கள் என அழைப்பார்கள். இந்த கார்கள் எல்லாம் குறிப்பிட்ட காலம் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக பயன்படுத்துவார்கள். பின்னர் அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்து விடுவார்கள்.

இப்படியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர் ஜாஸ்பெர் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தன்னிடம் உள்ள டெமொ கார்களை குறைந்த விலையில் விற்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்தெந்த கார்கள் விற்பனைக்கு வருகிறது. அதன் விலை குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
இதன்படி நெக்ஸான் ஃபியர்லெஸ் +எஸ் டிசிஏ டிடி 1.2 பெட்ரோல் வேரியன்ட் ரூ16.40 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூ10 லட்சத்திற்கு கிடைக்கிறது. இதே நெக்ஸான்ல் பியர்லெஸ் பிஆர் + எஸ் டிடி 1.2 பெட்ரோல் ரூ15.10 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.இந்த கார் ரூ9.50 லட்சத்திற்கு கிடைக்கிறது.

பஞ்ச் சிஎன்ஜி அக்கம்பிளிஷ்டு டிசையர் எஸ் சிஎன்ஜி/ பெட்ரோல் கார் ரூ10.60 லட்சத்திற்கு விற்பனையாகி வந்தது. இந்த கார் ரூ6.50 லட்சத்திற்கு கிடைக்கிறது. பஞ்ச் இவி எம்பவர்டு +எல்ஆர் ரூ1.60 லட்சதிற்கு விற்பனையாவது ரூ10.00 லட்சத்திற்கு கிடைக்கிறது. டியாகோதுஇவி எல்ஆர் எக்ஸ் இசட் + டெக் லக்ஸ் ரூ11.80 லட்சத்திற்கு விற்பனையாவது ரூ5.80 லட்சத்திற்கு கிடைக்கிறது. நெக்ஸான் இவி 3.0 எம்பவர்டு எல்ஆர் கார் ரூ18.15 லட்சத்திற்கு விற்பனையாவது ரூ13 லட்சத்திற்கு கிடைக்கிறது.
நெக்ஸான் ஃபியர்லெஸ் பிஎஸ் + எஸ் டி 1.2 பெட்ரோல் கார் ரூ15.10 லட்சத்திற்கு விற்பனையாவது ரூ9.50 லட்சத்திற்கு கிடைக்கிறது. இதே காரில் ஃபியர்லெஸ் + எஸ்டிசிஏ டிடி 1.2 பெட்ரோல் கார் ரூ16.43 லட்சத்திற்கு விற்பனையான கார் ரூ10.50 லட்சத்திற்கு கிடைக்கிறது. டாடா கர்வ் இவி எம்பவர்டு + ஏ 55 கார் ரூ24.10 லட்சத்திற்கு விற்பனையாவது ரூ14 லட்சத்திற்கு கிடைக்கும். கர்வ் அக்கம்பிளீஷ்டு ஏ 1.5 டீசல் கார் ரூ21.65 லட்சத்திற்கு விற்பனையாவது ரூ13 லட்சத்திற்கு கிடைக்கும். அல்ட்ராஸ் எக்ஸ் இசட் + 1.5 டீசல் இன்ஜின் கார் ரூ11.10 லட்சத்திற்கு விற்பனையாவது ரூ6 லட்சத்திற்கு கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதாவதுஅதிகபட்சமாக ர%4.10 லட்சம் முதல் ரூ10.10 லட்சம் வரை தள்ளுபடி விலையில் இந்த கார்கள் கிடைக்கிறது. பலர் குறைந்த விலையில் கார்களை வாங்க நினைக்கும் போது இப்படியாக டெமோ கார்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications









