டாடா நிறுவனத்துக்கு இந்த மாநிலங்கள் இல்லைனா கதை கந்தல்! தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை கடந்த மே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது. ஏனெனில் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் டாடா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையானது இதுவே முதல்முறை ஆகும். இதுகுறித்தும், இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக டாடா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்தும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துவரும் நிலையில், இதில் டாடா மோட்டார்ஸ் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு மாதத்தில் விற்பனையாகும் டாடா எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை ஆயிரம் என்கிற பெஞ்ச்மார்க்கை தொட்டது.

tata electric car sales

அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே 10 ஆயிரம் என்கிற பெஞ்ச்மார்க்கை எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் தற்போது தொட்டுள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 326 யூனிட்கள் ஆகும். இது கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா எலெக்ட்ரிக் கார்களை காட்டிலும் சுமார் 102% அதிகமாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 5,685 யூனிட் டாடா எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பொதுவாக, எலெக்ட்ரிக் கார்களுக்கு மாநகரங்களில் தான் மார்க்கெட் உருவாகி வருவதாக ஒரு பார்வை இருக்கிறது. ஏனெனில், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் முதலாவதாக மாநகரங்களில் தான் அதிகமாக கொண்டுவரப்படும். ஆனால், டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு நகரத்தை தாண்டி குறு நகரங்கள் மற்றும் இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கூட கஸ்டமர்கள் உள்ளனர்.

tata electric car sales

மாநிலங்களை பொறுத்தவரையில், மஹாராஷ்டிராவில் அதிக டாடா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகுகின்றன. இந்த மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 1,382 டாடா எலெக்ட்ரிக் கார்கள் RTO அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவுக்கு அடுத்த 2வது இடத்தை ராஜஸ்தான் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் கடந்த மாதத்தில் 1,302 டாடா எலெக்ட்ரிக் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது இடத்தில் தெலுங்கானா 1,141 டாடா எலெக்ட்ரிக் கார் பதிவுகள் உடன் உள்ளது. இந்த வரிசையில் 4வது மற்றும் 5வது இடங்களில் கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளன. இந்த மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் முறையே 1,057 மற்றும் 732 டாடா எலெக்ட்ரிக் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

6வது இடத்தில் தமிழ்நாட்டை காட்டிலும் வெறும் ஒரேயொரு எலெக்ட்ரிக் கார் குறைவாக 731 டாடா எலெக்ட்ரிக் கார் பதிவுகள் உடன் உத்தர பிரதேசம் மாநிலம் உள்ளது. இதற்கடுத்து டாப்-10 இடத்திற்குள் டெல்லி, குஜராத், கர்நாடகா மற்றும் ஒடிசா மாநிலங்கள் உள்ளன. இந்த லிஸ்ட்டில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ள மாநிலங்களில் மட்டும் கடந்த மாதத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டாடா எலெக்ட்ரிக் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Rank State Registrations
1 Maharashtra 1,382
2 Rajasthan 1,302
3 Telangana 1,141
4 Kerala 1,057
5 Tamil Nadu 732
6 Uttar Pradesh 731
7 Delhi 584
8 Gujarat 532
9 Karnataka 531
10 Odisha 396

இந்த நான்கு மாநிலங்களில் மட்டும் மொத்தம் 4 ஆயிரத்து 882 டாடா எலெக்ட்ரிக் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த மே மாதத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்த மொத்த எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையில் 47% ஆகும். தமிழ்நாட்டையும் சேர்த்தால், 52%- 53% வரும். அதாவது, இந்தியாவின் இந்த ஐந்து மாநிலங்களில் தான் பாதி எண்ணிக்கையிலான டாடா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறிய அளவிலான மாநிலமாக இருப்பினும் கேரளாவில் கடந்த மாதத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டாடா எலெக்ட்ரிக் கார்கள் RTO-இல் பதிவு செய்யப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை தருகிறது. அதேபோல், ஒரே மாதத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டாடா எலெக்ட்ரிக் கார்கள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டு இருப்பதும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

Article Published On: Sunday, June 7, 2026, 6:31 [IST]
English summary
Tata electric car sales crossed 10000 units for the first time in a month in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out