10 லட்ச ரூபாய் காரின் விலை வெறும் 6 லட்சமாக குறைகிறது! ஜிஎஸ்டி வரி குறைப்பை தொடர்ந்து அடுத்த அதிரடி!

ஐசி இன்ஜின் மூலம் இயங்கும் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) இயக்குவதற்கு மிகவும் குறைவான செலவே ஆகும். இது நன்றாக தெரிந்திருந்தாலும் கூட, பலர் இன்னமும் பெட்ரோல், டீசல் கார்களைதான் வாங்கி கொண்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் கார்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்களின் விலை (Price) மிகவும் அதிகம் என்பதுதான் இதற்கு காரணம். எனவே எலெக்ட்ரிக் கார்களின் விலையை குறைப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு திட்டம்தான் பாஸ் (BAAS - Battery As A Service).

Tata Harrier EV

பாஸ் முறையில் நீங்கள் எலெக்ட்ரிக் காரை வாங்கினால், அதன் விலை மிகவும் குறைவாக இருக்கும். நீங்கள் பேட்டரிக்கு பணம் செலுத்த மாட்டீர்கள் என்பதுதான் இதற்கு காரணம். எலெக்ட்ரிக் கார்களிலேயே மிகவும் விலை உயர்ந்த பாகம் என்றால், அது பேட்டரிதான். அதற்கு பணம் செலுத்த தேவையில்லை என்பதால், எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவாக இருக்கும்.

ஆனால் நீங்கள் இயக்க கூடிய ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். உதாரணத்திற்கு இந்திய சந்தையில் நேற்று (பிப்ரவரி 20) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch EV Facelift) எலெக்ட்ரிக் காரை எடுத்து கொள்ளலாம்.

Tata Punch EV Facelift

இதன் ஆரம்ப விலை 9.69 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பேட்டரியுடன் சேர்த்து டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கான விலை ஆகும். இந்த முறையில் நீங்கள் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரை வாங்கினால், ஓட்டுவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

ஆனால் பாஸ் முறையில் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரை வாங்கினால், அதன் விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் இந்த முறையை தேர்வு செய்தால், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரை இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், நீங்கள் 2.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த பாஸ் முறையின் மிகப்பெரிய நன்மையே, விலை மிகவும் குறைவு என்பதுதான். டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரை வழக்கமான முறையில் வாங்குவதை காட்டிலும், பாஸ் முறையில் வாங்கினால், 3.20 லட்ச ரூபாயை சேமிக்க முடியும். பாஸ் முறையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள், எலெக்ட்ரிக் காரின் விலையில், தோராயமாக 30-40 சதவீத தொகையை சேமிக்கலாம்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், பேட்டரிகள்தான் எலெக்ட்ரிக் கார்களிலேயே மிகவும் விலை உயர்ந்த பாகம் ஆகும். அவற்றை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுமோ? என்ற அச்சத்தாலும் கூட, நிறைய பேர் எலெக்ட்ரிக் காரை வாங்குவதை தவிர்க்கின்றனர். ஆனால் பாஸ் முறையில், சம்பந்தப்பட்ட நிறுவனமே பேட்டரியின் பராமரிப்பை கவனித்து கொள்ளும்.

தேவைப்படும்போது, பேட்டரியை மாற்றியும் விடும். எனவே பாஸ் முறையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் எப்போதும் ஆரோக்கியமான பேட்டரியின் மூலமாக எலெக்ட்ரிக் காரை இயக்க முடியும். இப்படி ஏராளமான நன்மைகள் இருப்பதால், பாஸ் முறையை ஏராளமானோர் தேர்வு செய்து வருகின்றனர். எனவே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்கிறது. அவை டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் டாடா கர்வ் இவி (Tata Harrier EV) ஆகியவை ஆகும்.

இதில், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரில் மட்டுமே பாஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற எலெக்ட்ரிக் கார்கள் எதிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் பாஸ் ஆப்ஷனை வழங்கவில்லை. நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான், பாஸ் ஆப்ஷனை பெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

ஆனால் கூடிய விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற எலெக்ட்ரிக் கார்களிலும், பாஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டால், டாடா எலெக்ட்ரிக் கார்களின் விலை சுமார் 30-40 சதவீதம் குறையும். உதாரணத்திற்கு ஒரு எலெக்ட்ரிக் காரின் விலை தற்போது 10 லட்ச ரூபாய் என்றால், பாஸ் முறையின் மூலம் அந்த எலெக்ட்ரிக் காரை நீங்கள் வெறும் 6-7 லட்ச ரூபாய்க்கே வாங்கி விட முடியும்.

இதன் காரணமாக எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரிக்கும். இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நன்மை அளிக்க கூடியதாக இருக்கும். கூடவே எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிப்பால், இந்திய சாலைகளில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்சனையும் ஓரளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி (GST) வரியை குறைத்தது. இதன் காரணமாக கார்களின் விலை பெரும் அளவிற்கு குறைந்தது. இதை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாஸ் திட்டத்தின் மூலம், தனது எலெக்ட்ரிக் கார்களின் விலைகளை குறைக்கவுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 21, 2026, 14:15 [IST]
English summary
Tata electric cars likely to become 40 per cent cheaper check all details here
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+