அனைத்து டாடா EV கார்களுக்கும் BaaS திட்டம் அறிவிப்பு... ரூ.7.30 லட்சம் வரை குறையும் ஆரம்ப விலை!

மின்சார கார்களை வாங்குவோருக்கு ரேஞ்ச், சார்ஜ் நேரம் உள்ளிட்டவற்றுடன் பெட்ரோல் கார்களை ஒப்பிடும்போது, விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. இதுதான் பலரையும் வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்க வைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக பேட்டரி செலவு மொத்த விலையில் கணிசமான பங்கை வகிக்கிறது. இந்தச் சிக்கலை சமாளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் கொண்டு வந்த Battery-as-a-Service (BaaS) திட்டம், தற்போது அதன் அனைத்து மின்சார கார் வரிசைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை டியாகோ EV மற்றும் பன்ச் EV கார்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்தத் திட்டம், தற்போது நெக்ஸான் EV, கர்வ் EV, சியரா EV மற்றும் ஹாரியர் EV ஆகிய கார்களுக்கும் கிடைக்கிறது. இதன் மூலம் டாடாவின் அனைத்து முக்கிய மின்சார கார்களையும் குறைந்த ஆரம்ப விலையில் வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், இது விலை தள்ளுபடி கிடையாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

Tata Seirra EV

கூடுதல் நிதித் திட்டம்

BaaS திட்டத்தின் கீழ் காரின் விலையும் பேட்டரிக்கான செலவும் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. வாகனத்திற்கும் பேட்டரிக்கும் தனித்தனி கடன் கணக்குகள் ஏற்படுத்தப்படுவதால், காரை வாங்கும்போது செலுத்த வேண்டிய ஆரம்பத் தொகை குறைகிறது. பேட்டரிக்கான மாதாந்திர கட்டணம் அதன் திறன், முன்பணம் மற்றும் தேர்வு செய்யப்படும் கடன் காலத்தைப் பொறுத்து மாறுபடும்.

Also Read

இந்தத் திட்டத்தில் டியாகோ EV காரின் ஆரம்ப விலை ரூ.4.69 லட்சமாகவும், பன்ச் EV எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ.6.59 லட்சமாகவும் உள்ளது. நெக்ஸான் EV ரூ.8.99 லட்சத்திலும், கர்வ் EV ரூ.10.99 லட்சத்திலும், சியரா EV ரூ.11.99 லட்சத்திலும் தொடங்குகின்றன. ஹாரியர் EV காரின் BaaS ஆரம்ப விலை ரூ.14.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tata Punch EV

எவ்வளவு குறையும்?

வழக்கமான விலையுடன் ஒப்பிடும்போது, ஆரம்ப விலை குறையும் அளவு மாடலுக்கு ஏற்ப மாறுகிறது. டியாகோ EV காருக்கு ரூ.2.30 லட்சமும், பன்ச் EV காருக்கு ரூ.3.20 லட்சமும் குறைகிறது. நெக்ஸான் EV எஸ்யூவிக்கு ரூ.5.35 லட்சமும், கர்வ் EV காரின் விலை ரூ.6.20 லட்சமும் குறைகிறது. சியரா EV காருக்கு ரூ.6.80 லட்சமும், ஹாரியர் EV காருக்கு அதிகபட்சமாக ரூ.7.30 லட்சமும் குறைவாக வாங்கும் வாய்ப்பு உள்ளது.

Also Read

இந்த திட்டத்தில் பேட்டரியின் விலைக்கும், பயன்பாட்டுக்கும் தக்கவாறு தனி நிதித் திட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும். டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள தகவலில், டியாகோ EV மற்றும் பன்ச் EV கார்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.60 கட்டணமும், நெக்ஸான் EV எஸ்யூவிக்கு ரூ.4.40 கட்டணமும், கர்வ் EV காருக்கு ரூ.5 கட்டணமும், சியரா EV காருக்கு ரூ.5.50 கட்டணமும், ஹாரியர் EV காருக்கு ரூ.5.90 என்ற அளவில் பேட்டரி பயன்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tata Harrier EV

பயன்பாட்டுக் கட்டணம்

மேலும், இந்த திட்டத்தில் பேட்டரிக்கான மாதாந்திர கட்டணத்தில் சார்ஜிங் செலவு, காரின் பராமரிப்பு, பழுது நீக்கம் போன்ற செலவுகள் சேர்க்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். BaaS மூலம் குறைந்த ஆரம்ப விலையை பார்த்து மட்டும் முடிவெடுப்பது அபத்தமாகிவிடும். மாதாந்திர பேட்டரி கட்டணம், சார்ஜிங் செலவு மற்றும் தினசரி பயன்பாடு கட்டணம் ஆகியவற்றை சேர்த்து கணக்கிடுவது அவசியம்.

இதன் மூலம் டாடா EV வாங்க விரும்புபவர்களுக்கு தற்போது இரண்டு நிதித் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வழிகள் உள்ளன. பேட்டரி உட்பட காரை வழக்கமான முறையில் மொத்த விலையில் வாங்கலாம். இல்லையெனில், BaaS திட்டத்தைத் தேர்வு செய்து ஆரம்ப முதலீட்டை குறைத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், BaaS திட்டத்தில் உள்ள நிபந்தனைகளையும், மாதாந்திர கட்டணங்களையும் அறிந்து கொண்டு வாங்குவது அவசியமாகிறது.

Article Corrections

Typo Error In URL Rectified.
Article Published On: Tuesday, September 29, 2026, 9:58 [IST]
English summary
Tata ev baas battery as a service tiago punch nexon curvv sierra harrier price details
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X