மஹிந்திராவுக்குப் போட்டியாக டாடா கொண்டு வந்த புதிய கார்கள்.. வசதிகள்ல கலக்குது!
இந்த 2026ம் ஆண்டு தொடக்கத்தில் தான் ஹேரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி மாடல்களுக்கு பெட்ரோல் இன்ஜின் தேர்வைக் கொடுத்து விரிவாக்கம் செய்தது டாடா மோட்டார்ஸ். அதற்கு முன்பு வரை டீசல் இன்ஜினுடன் மட்டுமே இந்த எஸ்யூவிக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டதோடு, பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் மட்டும் கிடைக்கும் வகையில் டாப் எண்டில் 'அல்ட்ரா' (Ultra) வேரியன்ட்களையும் பிரத்தியேகமாக வெளியிட்டது அந்நிறுவனம்.
இந்த நிலையில் தற்போது அந்த அல்ட்ரா வேரியன்ட்களை ஹேரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிக்களின் டீசல் இன்ஜினுக்கும் கொடுத்து டாடா மோட்டார்ஸ் விரிவாக்கம் செய்திருக்கிறது. அல்ட்ரா வேரியன்ட் மட்டுமின்றி அதன் ரெட் டார்க் வெர்ஷன்களையும் தற்போது டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வேரியன்ட்களில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன, என்ன விலையில் வெளியாகியிருக்கின்றன என்பதை விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.

ஹேரியர் எஸ்யூவியின் டீசல் லைன்-அப்பில் ஃபியர்லெஸ்+ (Fearless+) வேரியன்டே இதுவரை டாப் எண்டு வேரியன்டாக இருந்து வந்தது. தற்போது அதற்கு மேலாக ஃபியர்லெஸ் அல்ட்ரா, ஃபியர்லெஸ் அல்ட்ரா ரெட் டார்க் வேரியன்ட்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. இதனை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளுடனும் நாம் வாங்கலாம். 'ரெட் டார்க்' (Red Dark) வெர்ஷனில் வசதிகள் ரீதியில் எந்த வேறுபாடும் இருக்காது. ஆனால் தனித்துவமான டிசைன் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்.
சஃபாரி எஸ்யூவியின் டீசல் லைன்-அப்பில் 'அக்காம்ப்ளிஷ்டு X+ 6S' (Accomplished X+ 6S) வேரியன்ட் தான் இதுவரை டாப் எண்டாக இருந்து வந்தது. தற்போது அதற்கு மேலாக அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா, அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா 6S, அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா ரெட் டார்க் மற்றும் அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா 6S ரெட் டார்க் ஆகிய வேரியன்ட்கள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து வேரியன்ட்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளுடனும் கிடைக்கின்றன.

ஹேரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு எஸ்யூவிக்களின் டாப் எண்டு வேரியன்ட்களிலும், பெரிய 14.53 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டால்பி அட்மாஸ், இன்-பில்ட் டேஷ்கேமுடன் கூடிய டிஜிட்டல் IRVM, ஆன்-போர்டு நேவிகேஷன், மெமரி ஃபங்ஷனுடன் கூடிய ORVM, ஸ்லைடிங் முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களை வாஷ் செய்யும் வசதி மற்றும் 65W டைப்-C சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹேரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிக்களின் அல்ட்ரா ரெட் டார்க் வெர்ஷன்களிலும் இந்த அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கும். இத்துடன் மேலே கூறியது போல காஸ்மெடிக்காக தனித்துவமான டிசைன் அம்சங்களையும் அவை கொண்டிருக்கும். குறிப்பாக ரெட் பிரேக் காலிப்பர்களுடன் கூடிய 19 இன்ச் கருப்பு நிற அலாய் நிற அலாய் வீல்கள், காரின் உட்புறம் கார்நீலியன் ரெட் தீம், சீட்களுக்கு லெதர் போன்ற ஃபினிஷ், ஹேரியரின் வெளிப்புறம் தனித்துவமான நைட்ரோ கிரிம்சன் நிறம் டிசைன் அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸைப் பற்றி தனியே சொல்ல வேண்டியதில்லை. அதே 2.0 லிட்டர், டர்போ டீசல் இன்ஜின் தான். இந்த இன்ஜினானது 170 hp பவர் மற்றும் 350 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய ஹேரியர் வேரியன்ட்களின் விலை விவரங்கள் பின்வருமாரு.
ஹேரியர் ஃபியர்லெஸ் அல்ட்ரா மேனுவல் - ரூ.23.85 லட்சம்
ஹேரியர் ஃபியர்லெஸ் அல்ட்ரா ரெட் டார்க் மேனுவல் - ரூ.24.40 லட்சம்
ஹேரியர் ஃபியர்லெஸ் அல்ட்ரா ஆட்டோமேட்டிக் - ரூ.25.30 லட்சம்
ஹேரியர் ஃபியர்லெஸ் அல்ட்ரா ரெட் டார்க் ஆட்டோமேட்டிக் - ரூ.25.85 லட்சம்
புதிய சஃபாரி மேனுவல் வேரியன்ட்களின் விலை விவரங்கள் பின்வருமாரு.
சஃபாரி அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா மேனுவல் - ரூ.24.50 லட்சம்
சஃபாரி அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா மேனுவல் 6S - ரூ.24.60 லட்சம்
சஃபாரி அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா ரெட் டார்க் மேனுவல் - ரூ.24.85 லட்சம்
சஃபாரி அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா ரெட் டார்க் மேனுவல் 6S - ரூ.24.95 லட்சம்
புதிய சஃபாரி ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களின் விலை விவரங்கள் பின்வருமாரு.
சஃபாரி அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா ஆட்டோமேட்டிக் - ரூ.25.95 லட்சம்
சஃபாரி அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா ஆட்டோமேட்டிக் 6S - ரூ.26.05 லட்சம்
சஃபாரி அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா ரெட் டார்க் ஆட்டோமேட்டிக் - ரூ.26.30 லட்சம்
சஃபாரி அக்காம்ப்ளிஷ்டு அல்ட்ரா ரெட் டார்க் ஆட்டோமேட்டிக் 6S - ரூ.26.40 லட்சம்
(அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே)
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சஃபாரி மற்றும் ஹேரியர் எஸ்யூவி பெட்ரோல் மாடல்களின் டாப் எண்டு அல்ட்ரா வேரியன்ட் வெளியான போது, இந்த வசதிகளுடன் கூடிய வேரியன்ட் டீசல் இன்ஜினுடனும் இருந்தால் நன்றாக இருக்கும் என சில வாடிக்கையாளர்கள் கூறியது டாடாவிற்கு கேட்டிருக்கிறது போல. தற்போது டீசல் இன்ஜினுடனும் அவற்றை வெளியிட்டுவிட்டது. இந்தப் புதிய வேரியன்ட்களின் வெளியீடு மூலம் வரும் மாதங்களில் இந்த எஸ்யூவிக்களின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications