நீண்ட நாள் கனவு! மக்கள் கேட்டதை தட்டாமல் செய்து குடுத்த டாடா! போட்டி நிறுவனங்களுக்கு நடுக்கம் எடுத்திருக்கும்!

டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய 2 கார்களும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 கார்களின் புத்தம் புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன்களை, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் பெட்ரோல் வெர்ஷன்களிலும், 1.5 லிட்டர் T-GDI டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tata Harrier Side View

டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களிலும், இதுதவிர ஏற்கனவே, 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடனும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் வழங்கப்படுகின்றன.

டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் பெட்ரோல் வெர்ஷன்களின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

Tata Harrier

அத்துடன் மல்டி கலர் ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டால்பி அட்மாஸ் உடன் 10 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ட்யூயல் ஸோன் ஆட்டோ ஏசி போன்ற வசதிகளும் டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் பெட்ரோல் வெர்ஷன்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

மறுபக்கம் இந்த 2 கார்களின் பெட்ரோல் வெர்ஷன்களின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

சரி, விலை விஷயத்திற்கு வருவோம். டாடா ஹாரியர் காரின் பெட்ரோல் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12.89 லட்ச ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.69 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் டாடா சஃபாரி காரின் பெட்ரோல் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.29 லட்ச ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25.20 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களிலும் பெட்ரோல் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்பது இந்திய வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஆகும். அந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. எனவே இனி வரும் நாட்களில், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாம் நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 7, 2026, 23:08 [IST]
English summary
Tata harrier safari petrol launched in india all you need to know
மேலும்... #tata motors #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+