யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் புதிய எஸ்யூவிக்களை வெளியிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹேரியர் (5 சீட்டர்) மற்றும் சஃபாரி (7 சீட்டர்) எஸ்யூவிக்களின் ஸ்டெல்த் எடிஷன் (Stealth Edition) கார்களை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு இந்த இரண்டு கார்களிலும் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்ட போதும் இதேபோல் ஸ்டெல்த் எடிஷன்களை டாடா வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இரண்டு கார்களின் லைன்-அப்பிலும் டாப் எண்டிற்கு சற்று கீழான வேரியன்ட்களின் அடிப்படையில் ஸ்டெல்த் எடிஷன் கார்களை வெளியிட்டிருந்தது டாடா. ஆனால் இந்த முறை ஹேரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார்களின் டாப் எண்டு வேரியன்டின் அடிப்படையில் ஸ்டெல்த் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், இரண்டு கார்களிலும் கொடுக்கப்பட்டும் அனைத்து வசதிகள் மற்றும் அம்சங்களையும் ஸ்டெல்த் எடிஷனிலும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

Tata Harrier Stealth Edition

ஏற்கனவே இந்த இரண்டு எஸ்யூவிக்களின் டார்க் மற்றும் ரெட் டார்க் எடிஷன்கள் விற்பனையில் இருக்கும் நிலையில், அத்துடன் ஸ்டெல்த் எடிஷனையும் சேர்த்து விற்பனை செய்யவுள்ளது டாடா மோட்டார்ஸ். சரி இந்த மூன்று எடிஷன்களுக்கு இடையிலும் என்ன வேறுபாடு? ஒன்றும் இல்லை, நிறம் மட்டும் தான்.

ஆம், இந்த சிறப்பு எடிஷன் வேரியன்ட்களுக்கு இடையில் வசதிகளிலோ, பவர்ட்ரெயினிலோ எந்த மாற்றமும் இல்லை. மாறாக வெளிப்புறமும் உட்புறமும் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறத்தில் மட்டுமே வேறுபாடு. ஆனால், இது இந்த கார்களின் ஸ்டாண்டர்டு வெர்ஷன்களில் இருந்து தனித்துக் காட்டும் வகையிலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tata Safari Stealth Edition

ஹேரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிக்களின் டார்க் எடிஷனானது முழுவதுமாக கிளாஸ் பிளாக் நிறத்தைக் கொண்டிருக்கும். ரெட் டார்க் எடிஷனில் கிளாஸ் பிளாக் நிறத்துடனேயே, ஆங்காங்கே சிவப்பு நிற ஹைலைட்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இது காரின் உட்புறமும் தொடரும். இந்த ஸ்டெல்த் எடிஷனானது கிளாஸ் பிளாக்கிற்குப் பதிலாக முழுவதுமாக மேட் பிளாக் (Matte Black) நிறத்தைக் கொண்டுள்ளது.

இரவில் இந்தக் கார் இருக்கும் இடமே தெரியாமல் இருப்பது போலான ஒரு நிறமாக இந்த மேட் பிளாக் நிறம் இருக்கிறது. அதனாலேயே ஸ்டெல்த் எடிஷன் இதனை டாடா அழைப்பதாகத் தெரிகிறது. ஹேரியர் எஸ்யூவியின் லைன்-அப்பில் டாப் எண்டாக இருக்கும் ஃபியர்லெஸ் அல்ட்ரா வேரியன்டை அடிப்படையாகக் கொண்டும், சஃபாரி எஸ்யூவி லைன்-அப்பில் டாப் எண்டான அக்காம்பிளிஷ்டு அல்ட்ரா வேரியன்டை அடிப்படையாகக் கொண்டும் புதிய ஸ்டெல்த் எடிஷன் கார்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டு கார்களிலும் பெட்ரோல், டீசல், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என அனைத்து விதமான பவர்ட்ரெயின் காம்பினேஷன்களிலும் ஸ்டெல்த் எடிஷனை நாம் வாங்கலாம். சஃபாரி எஸ்யூவியானது 6 சீட்டராகவும் விற்பனை செய்யப்படும் நிலையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டும் 6 சீட் லேஅவுட்டுடனும் ஸ்டெல்த் எடிஷனை நாம் வாங்க முடியும். மேனுவல் கியர்பாக்ஸுடன் 7 சீட் லேஅவுட்டுடன் மட்டுமே ஸ்டெல்த் எடிஷன் கிடைக்கிறது.

ஹேரியர் ஸ்டெல்த் எடிஷனை 23.43 லட்சம் ரூபாய் முதல் 26.01 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ். ஸ்டாண்டர்டு ஃபியர்லெஸ் அல்ட்ரா வேரியன்டை விட ஸ்டெல்த் எடிஷன் ஃபியர்லெஸ் அல்ட்ரா வேரியன்டானது தோராயமாக 60,000 ரூபாய் வரை கூடுதல் விலையைக் கொண்டுள்ளது.

அதேபோல் சஃபாரி ஸ்டெல்த் எடிஷனை 24.04 லட்சம் ரூபாய் முதல் 26.76 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். ஸ்டாண்டர்டு அக்காம்பிளிஷ்டு அல்ட்ரா வேரியன்டை விட, ஸ்டெல்த் எடிஷன் அக்காம்பிளிஷ்டு அல்ட்ரா வேரியன்டானது 56,000 ரூபாய் முதல் 61,000 ரூபாய் வரை கூடுதல் விலையைக் கொண்டுள்ளது. அப்படியென்றால் இந்த மேட் பிளாக் நிறத்திற்கு இந்தக் கூடுதல் தொகை என வைத்துக் கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்பெஷல் எடிஷன் என்ற பதத்திற்கு ஏற்ப இந்த ஸ்டெல்த் எடிஷனின் மேட் பிளாக் நிறும் மிகவும் தனித்துவமான ஒன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாக சாலையில் செல்பவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் ஒன்றாக இந்த நிறம் இருக்கும். மேலும், இது வாடிகையாளர்களுக்குப் பரிசீலனை செய்வதற்கு கூடுதல் தேர்வையும் கொடுக்கிறது.

Article Published On: Thursday, July 9, 2026, 20:07 [IST]
English summary
Tata launched harrier and safari suvs stealth editions in india
மேலும்... #tata motors #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out