இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையின் ராஜாவாக மாறிய டாடா! யாராலும் செய்ய முடியாததை அவங்க எப்படி செஞ்சாங்க தெரியுமா

இந்தியாவில் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் அதிக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 12,077 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இது கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 124.7 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உருவெடுத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருப்பது மஹிந்திரா (Mahindra) நிறுவனம் ஆகும்.

Tata Harrier EV

மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 7,683 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 118.7 சதவீத வளர்ச்சி ஆகும். இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்திருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.

ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 7 எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது.

Tata Sierra EV

அவை டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV), டாடா சியரா இவி (Tata Sierra EV) மற்றும் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) ஆகியவை ஆகும்.

இதில், டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை பாஸ் (BaaS) மூலமும் வாங்கலாம். பாஸ் திட்டத்தில் வாங்கினால், டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 4.69 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் பாஸ் முறையை தேர்ந்தெடுத்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 2.6 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

மறுபக்கம் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 9.69 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் பாஸ் முறையில் வாங்கினால் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே. இருப்பினும் ஒரு கிலோ மீட்டருக்கு 2.6 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

டாடா டியாகோ இவி மற்றும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்கள் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த வரிசையில் டாடா டிகோர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாயாக இருக்கிறது.

டாடா டிகோர் இவி எலெக்ட்ரிக் காருக்கு பாஸ் ஆப்ஷன் கிடையாது என்பதும், இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் டாடா டிகோர் இவி எலெக்ட்ரிக் காரை போல் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையும் 12.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. மேலும் இதற்கும் பாஸ் திட்டம் கிடையாது.

இதற்கு அடுத்தபடியாக டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 16.99 லட்ச ரூபாயாக உள்ளது. இதற்கும் பாஸ் ஆப்ஷன் இல்லை. இந்த வரிசையில் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18.79 லட்ச ரூபாயாக இருக்கிறது. டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கும் பாஸ் ஆப்ஷன் கிடையாது. இதற்கு அடுத்தபடியாக டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 21.69 லட்ச ரூபாயாக இருக்கிறது. டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காருக்கும் பாஸ் ஆப்ஷன் இல்லை. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் விலை குறைவான டியாகோ இவி முதல் விலை உயர்ந்த ஹாரியர் இவி வரை பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் நம்பர்-1 எலெக்ட்ரிக் கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இருப்பதற்கு இதுவே மிகவும் முக்கியமான காரணம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Sunday, July 5, 2026, 17:26 [IST]
English summary
Tata motors becomes indias number 1 electric car brand in june 2026
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out