ஒட்டுமொத்த மாருதி கம்பெனிக்கும் சவால் விடும் டாடா கார்கள்! இந்த இரண்டை வாங்க தான் மொத்த கூட்டமும்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த ஜூன் மாதத்தில் டாடா கார்கள் விற்பனை சுமார் 67 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் மொத்தம் 67 ஆயிரத்து 76 கார்களை விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 37 ஆயிரத்து 83 கார்களை மட்டுமே டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

tata motors cars-wise sales report

இந்த வகையில் பார்க்கும்போது டாடா கார்களின் விற்பனை சுமார் 67.40%, அதாவது 24 ஆயிரத்து 993 யூனிட்கள் அதிகரித்துள்ளது. இந்த அளவிற்கு அபரிதனமான வளர்ச்சியை இந்த நிறுவனம் கண்டிருப்பதற்கு முக்கிய காரணம், டாடா பன்ச் மற்றும் நெக்ஸான் கார்கள் ஆகும். இவை இரண்டும் தான் வழக்கம்போல் டாடாவின் நம்பிக்கைக்குரிய கார்களாக விளங்குகின்றன.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் பன்ச் மற்றும் நெக்ஸான் கார்களின் விற்பனை விண்ணை தொட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். எந்த அளவிற்கு என்றால், கடந்த ஜூனில் ஒட்டுமொத்தமாக அனைத்து கார் நிறுவனங்களின் கார்களின் விற்பனை எண்ணிக்கையை சேர்த்துப் பார்த்தால் கூட டாடா பன்ச் மற்றும் நெக்ஸான் கார்கள் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான டாப்-2 கார்களாக விளங்குகின்றன.

tata motors cars-wise sales report

கடந்த மாதத்தில் மொத்தம் 21 ஆயிரத்து 6 பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில் இத்தனை ஆயிரம் பன்ச் கார்கள் விற்பனையாகுவது இதுவே முதல் முறை ஆகும். கடந்த மே மாதத்திலும் 20 ஆயிரத்து 208 பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், அதனுடன் ஒப்பிடுகையில் இது 3.95%, அதாவது 798 யூனிட்கள் அதிகமாகும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 10 ஆயிரத்து 446 பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால் கடந்த ஆண்டு ஜூனை காட்டிலும் இந்த ஆண்டு ஜூனில் பன்ச் கார்கள் விற்பனை அப்படியே டபுள் ஆகியுள்ளது. பன்ச் காருக்கு அடுத்துள்ள நெக்ஸான் கடந்த மாதத்தில் 18 ஆயிரத்து 335 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2025 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்த 11 ஆயிரத்து 602 நெக்ஸான் கார்களுடன் ஒப்பிடுகையில் இது 58.03% அதிகம் என்றாலும், கடந்த 2026 மே மாதத்தை காட்டிலும் 4.01% குறைவாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 19 ஆயிரத்து 100 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வரிசையில் இவற்றிற்கு அடுத்து டாடா டியாகோ கார் உள்ளது என்றாலும், இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. கடந்த மாதத்தில் 7 ஆயிரத்து 329 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கைகள் அனைத்திலும் பன்ச் இவி, நெக்ஸான் இவி மற்றும் டியாகோ இவி எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கைகள் அடங்குகின்றன. இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள டாடா கார்களை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Tata Model Jun-26 Jun-25 Diff Growth % YoY
Punch / EV 21,006 10,446 10,560 101.09
Nexon / EV 18,335 11,602 6,733 58.03
Tiago / EV 7,329 6,032 1,297 21.50
Sierra 6,392 0 6,392
Harrier / EV 2,962 1,259 1,703 135.27
Altroz 2,426 3,974 -1,548 -38.95
Curvv / EV 1,753 2,060 -307 -14.90
Safari 1,271 922 349 37.85
Tigor / EV 602 788 -186 -23.60
Total 62,076 37,083 24,993 67.40
Tata Model Jun-26 May-26 Diff Growth % MoM
Punch / EV 21,006 20,208 798 3.95
Nexon / EV 18,335 19,100 -765 -4.01
Tiago / EV 7,329 4,178 3,151 75.42
Sierra 6,392 6,606 -214 -3.24
Harrier / EV 2,962 2,815 147 5.22
Altroz 2,426 2,915 -489 -16.78
Curvv / EV 1,753 1,680 73 4.35
Safari 1,271 1,057 214 20.25
Tigor / EV 602 531 71 13.37
Total 62,076 59,090 2,986 5.05

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான அல்ட்ராஸ், கர்வ் மற்றும் டிகோர் கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே பதிவாகி வருகிறது. இருப்பினும், பன்ச் மற்றும் நெக்ஸான் கார்கள் டாடா நிறுவனத்தை உயர்த்தி தூக்கிப் பிடிக்கின்றன. புது, புது டாடா கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கைகள் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Sunday, July 12, 2026, 16:59 [IST]
English summary
Tata motors cars wise sales report of june 2026 punch nexon tiago top on list
மேலும்... #tata motors #tata nexon #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out