4 லட்சம் ரூபாய் தள்ளுபடி விலையில் டாடா கார் விற்பனை.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்த மே மாதம் பல்வேறு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் மிக மிகக் குறைவான விலையில் அந்தக் கார்களை நாம் வாங்க முடியும்.
அப்படி இந்தியாவில் டாடா விற்பனை செய்து வரும் கர்வ் EV கார் என்னென்ன சலுகைகளுடன் இந்த மாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதைப் பார்க்கலாம். மேலும் இந்தக் காரை எவ்வளவு குறைவான விலையில் நாம் வாங்க முடியும் என்பதையும் இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்தக் காரை வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்திருந்தால் அதற்கு இது தான் சிறப்பான நேரம், மிஸ் செய்துவிடாதீர்கள்.

2024ல் இந்த கர்வ் EV கூபே எஸ்யூவி காரை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். அப்போது 45 kWh பேட்டரி பேக் கொண்ட அடிப்படை வேரியன்டே 17.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இப்போது கூடுதல் வசதிகளுடன் 55 kWh என்ற பெரிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்டையே 16.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நீங்கள் வாங்க முடியும். இத்துடன் மேலே கூறிய சலுகைகளும் சேர்ந்தால் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்.
2024ல் இந்தக் கார் வெளியான போது கிரியேட்டிவ், அக்காம்ப்ளிஷ்டு, அக்காம்ப்ளிஷ்டு+S, எம்பவர்டு+ மற்றும் எம்பவர்டு+A என ஐந்து வேரியன்ட்களாக வெளியானது. ஆனால் இதில் மற்ற வேரியன்ட்களின் தயாரிப்பை எல்லாம் டாடா மோட்டார்ஸ் நிறுத்திவிட்டது. 2024 மற்றும் 2025ல் தயாரிக்கப்பட்ட கர்வ் EV மாடல்கள் இப்போதும் ஸ்டாக்கில் இருப்பதாக பல்வேறு டீலர்ஷிப்களும் கூறுகின்றன. அவற்றையே தள்ளுபடிகளுடன் நீங்கள் வாங்க முடியும்.

45 kWh பேட்டரி பேக் கொண்ட அடிப்படையான கிரியேட்டிவ் வேரியன்டிற்கு மட்டும் 3.3 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை மட்டும் டாடா மோட்டார்ஸ் கொடுத்திருக்கிறது. இதனைத் தவிர்த்து மற்ற அனைத்து வேரியன்ட்களையும் 3.8 லட்சம் ரூபாய் மதிப்புடைய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் நாம் வாங்கலாம். இல்லை எனக்கு 2026ல் தயாரிக்கப்பட்ட கார் தான் வேண்டும் என்றாலும் பரவாயில்லை, அதற்கும் சலுகைகளை வாரி இறைத்திருக்கிறது நிறுவனம்.
2026ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கர்வ் EV காரின் அடிப்படையான கிரியேட்டிவ் 45 kWh வேரியன்டிற்கு 2.8 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனைத் தவிர்த்து மற்ற அனைத்து வேரியன்ட்களையும் 3.3 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடியுடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த சலுகைகளானது மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வேரியன்ட்களின் ஸ்டாக் தீரும் வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இரண்டு கர்வ் EV வேரியன்ட்களை மட்டுமே ஃபிரஷ்ஷாகத் தயாரித்து வருகிறது டாடா மோட்டார்ஸ். ஒன்று அக்காம்ப்ளிஷ்டு X, மற்றொன்று எம்பவர்டு X (இதனை டார்க் எடிஷனாகவும் நாம் வாங்கலாம்). இந்த இரண்டு வேரியன்ட்களிலும் பெரிய 55 kWh பேட்டரி பேக் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறிய பேட்டரி பேக் கொண்ட கர்வ் EV வேரியன்ட்களை தற்போது டாடா மோட்டார்ஸ் தயாரிப்பதில்லை. இரண்டு வேரியன்ட்களும் முறையே 16.99 லட்சம் ரூபாய் மற்றும் 19.19 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
டாடா கர்வ் EV-யின் சிறப்பம்சங்கள்:
கர்வ் EV-யில் இப்போது ஸ்டாண்டர்டாக 55 kWh பேட்டரி பேக்கே கொடுக்கப்படுகிறது என்பதை மேலே குறிப்பிட்டிருந்தோம். இத்துடன் 167 hp பவர் மற்றும் 215 Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்படுகிறது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்பானது 502 கிமீ வரையிலான MIDC ரேஞ்சை வழங்குகிறது.
இதன் 55 kWh பேட்டரி பேக்கை 7.2 kW AC சார்ஜர் மூலமாக 10-100% வரை 7.6 மணி நேரத்திலும், 70 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 10-80% வரை 40 நிமிடங்களிலும் சார்ஜ் செய்ய முடியுமாம். டாடாவின் எலெக்டரிக் கார்களைப் பற்றி பேசும் போது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பேட்டரி வாரண்டி. தங்கள் கார்களின் பேட்டரிக்களுக்கு லைஃப்டைம் வாரண்டியை டாடா அளிப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா எதிர்பார்த்த அளவிற்கு கர்வ் EV வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் அதிகளவிலான கார்கள் விற்பனையாகாமல் தேங்கும் நிலை உருவாகிவிட்டது. இதனாலேயே இந்தக் காருக்கு அதிகளவிலான சலுககளை வாரி வழங்கி வருகிறது டாடா மோட்டார்ஸ். வரவேற்பைப் பெறாததால் இது மோசமான கார் என்று கூற முடியாது. எனவே இந்த நேரத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் குறைவான விலையில் இந்த கர்வ் EV-யை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications