7-சீட்டர் காரின் விலையை சைலண்ட்டாக உயர்த்திய டாடா! இனி இந்த காரை வாங்குவது நல்ல முடிவா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சஃபாரி கார்களின் விலைகளை எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் சைலண்ட்டாக உயர்த்தி உள்ளது. எந்த அளவிற்கு என்றால், சஃபாரி காரின் சில வேரியண்ட்களின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.61,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், சஃபாரியின் புதிய விலைகளையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முந்தைய காலத்தில் பிரபலமாக இருந்த பெயர்களில் மீண்டும் கார்களை அறிமுகம் செய்வதை சமீப காலமாக டாடா நிறுவனம் ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளது. அதன்படி, சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கார் தான் டாடா சஃபாரி ஆகும். இதன் விலைகள் தான் தற்போது ரூ.61,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

டாடா சஃபாரி காரின் சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.10,000 அளவிலும், சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.61,000 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை உயர்வினால், சஃபாரி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த ஆரம்ப விலையில் சஃபாரி காரின் ஸ்மார்ட் வேரியண்ட் கிடைக்கும்.
எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும் இதில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், முழுவதும் ஆட்டோமேட்டிக் வெப்பநிலை கண்ட்ரோல், 17.78 செமீ-இல் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் திரை, LED புரோஜெக்டர் ஹெட்லேம்ப், அட்வான்ஸ்டு எலெக்ட்ரானிக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேற்கூறப்பட்ட விலையில் இந்த வேரியண்ட்டில் பெட்ரோல் என்ஜின் தான் கிடைக்கும்.

டீசல் என்ஜின் உடன் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.85 லட்சம் ஆகும். ஸ்மார்ட் வேரியண்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ள பியூர் எக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.16.70 லட்சமாகவும், டீசல் என்ஜின் உடன் 17.85 லட்சமாகவும் தற்சமயம் உள்ளது.
இந்த வேரியண்ட்டில் குரல் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய பனோராமிக் சன்ரூஃப், 360-டிகிரி HD சரவுண்ட் வியூ கேமரா சிஸ்டம், 26.03 செ.மீ-இல் அல்ட்ரா வியூ HD ஹர்மன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் & இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் திரை, க்ரூஸ் கண்ட்ரோல், காரை ஸ்டார்ட் செய்வதற்கு அழுத்தக்கூடிய பட்டன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு & ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ரிமோட் செண்ட்ரல் லாக்கிங் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இவை இரண்டுடன், அட்வென்ச்சர் எக்ஸ்+, அக்கம்ப்ளிஷ்டு எக்ஸ், அக்கம்ப்ளிஷ்டு எக்ஸ்+, அக்கம்ப்ளிஷ்டு எக்ஸ்+ 6-சீட்டர், அக்கம்ப்ளிஷ்டு அல்ட்ரா மற்றும் அக்கம்ப்ளிஷ்டு அல்ட்ரா 6-சீட்டர் உள்ளிட்ட வேரியண்ட்களிலும் டாடா சஃபாரி விற்பனை செய்யப்படுகிறது. இதில், அக்கம்ப்ளிஷ்டு அல்ட்ரா 6-சீட்டர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.23.55 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ.24.70 லட்சம் (டீசல்) ஆக தற்சமயம் உள்ளன.
சஃபாரியின் இந்த டாப் வேரியண்ட்டில் சாம்சங் நிறுவனத்தின் 36.9 செ.மீ-இல் சினிமேட்டிக் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 22 வசதிகள் உடன் லெவல்-2 ADAS, சைகை மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய டெயில்கேட், 13 JBL ஆடியோ மோட்கள் உடன் ஹர்மன் ஆடியோவோர்க்ஸ் அட்வான்ஸ்டு, டோல்பி அட்மஸ் உள்பட ஏகப்பட்ட நவீன அம்சங்கள் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி காரில் புதியதாக ஸ்டீல்த் எடிஷன் என்கிற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ள இதே நேரத்தில் இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வினால் சஃபாரி காரின் விலைகள் அதிகரித்துள்ளன என்றாலும், இப்போதும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற காராகவே சஃபாரி விளங்குகிறது. ஆதலால், விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இந்த காரை வாங்கலாம் என்பது எங்களது கருத்தாகும்.


Click it and Unblock the Notifications