27.8கிமீ மைலேஜ் தரும் புதிய டாடா சிஎன்ஜி காரை எதற்காக வாங்க வேண்டும்? ரூ.8.70 லட்சத்தில் விலை!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் பிரபலமான அல்ட்ராஸ் (Altroz) காரில் புதியதாக சிஎன்ஜி-ஏஎம்டி (CNG-AMT) தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி காரில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், புதியதாக ஏஎம்டி ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி ஏஎம்டி காரின் முக்கியமான சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விலை: அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி ஏஎம்டி கார் ஆனது மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்யூர், ப்யூர் எஸ், கிரியேட்டிவ், கிரியேட்டிவ் எஸ் மற்றும் அக்கம்ப்ளிஷ்டு எஸ் என்பன அந்த 5 விதமான வேரியண்ட்கள் ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) முறையே ரூ.8,69,990, ரூ.8,99,990, ரூ.9,56,990, ரூ.9,81,990 மற்றும் ரூ.10,76,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

tata altroz icng amt specifications

என்ஜின்: புதிய அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி ஏஎம்டி காரிலும் வழக்கமான 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி மோடில், இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 72 பிஎச்பி மற்றும் 3,500 ஆர்பிஎம்-இல் 103 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி ஏஎம்டி காரில் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதில், க்ளட்ச் இல்லா ட்யூயல் பெடல் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. சிஎன்ஜி மோடில் அதிகப்பட்சமாக ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 27.8கிமீ மைலேஜை பெறலாம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. டாடா சிஎன்ஜி கார்களில் இரு சிஎன்ஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.

tata altroz icng amt specifications

மெக்கானிக்கல் பாகங்கள்: அல்ட்ராஸ் சிஎன்ஜி ஏஎம்டி காரில் சிங்கிள் அட்வான்ஸ்டு இசியு (ECU) வழங்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மோடுகளுக்கு மாறுவதை மென்மையானதாக வைக்கிறது. மேலும், விருப்பப்பட்டால் நேரடியாக சிஎன்ஜி மோடிலும் காரை ஸ்டார்ட் செய்யலாம். இந்த காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள இரு சிஎன்ஜி சிலிண்டர்கள் ஒவ்வொன்றும் 30 லிட்டர்கள் கொள்ளளவு கொண்டவை ஆகும். இது இல்லாமல், 37 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க்கும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அப்டேட்களை தவிர்த்து புதிய டாடா அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி ஏஎம்டி காரில் வேறெந்த அப்டேட்களும் கொண்டுவரப்படவில்லை. மேனுவல் கியர்பாக்ஸ் உடன் முன்பு எத்தகைய தோற்றத்தில் கிடைத்து வந்ததோ அதே தோற்றத்தில்தான் ஏஎம்டி கியர்பாக்ஸ் உடனும் கிடைக்கும். தொழிற்நுட்ப அம்சங்களிலும் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், புதிய அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி ஏஎம்டி கார் அதிக பேரால் வாங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில், இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை மக்களிடையே அதிகரித்துள்ளது. 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையிலான ஒரு வருடத்தில் 19% ஆக இருந்த சிஎன்ஜி கார்களின் தேவை, 2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் 22% ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி ஏஎம்டி காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது. இப்போதுதான் சில கார் நிறுவனங்கள் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் கார்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளன. ஆனால், டாடா நிறுவனம் ஏற்கனவே அதன் டியாகோ ஐ-சிஎன்ஜி, டிகோர் ஐ-சிஎன்ஜி மற்றும் பன்ச் ஐ-சிஎன்ஜி கார்களில் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை வழங்கி வந்த நிலையில், அது தற்போது அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி காருக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

Article Published On: Wednesday, May 13, 2026, 14:42 [IST]
English summary
Tata motors introduced altroz icng amt specifications check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+