31 நாளில் வரலாற்று சாதனை படைத்த டாடா! இவ்வளவு காரை வித்துட்டாங்களா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் இதுவரை இல்லாத மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விற்பனையில் சுமார் 47.1 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 71,066 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு நடந்த விற்பனவையுடனவ் ஒப்பிடும் போது 47.1 சதவீதம் அதிகம் ஆகும்.

Tata Motors Sales January 2026

இதில் உள்நாட்டில் மட்டும் மொத்தம் 70,222 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதே நேரம் கடந்தாண்டு மொத்தம் 48076 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது உள்நாட்டு விற்பனை 46.1 சதவீதம் அதிகமாகியுள்ளது.

ஏற்றுமதியை பொருத்தவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 844 கார்களை கடந்த ஜனவரி மாதம் ஏற்றுமதி செய்துளு்ளது. இது கடந்தாண்டு ஜனவரி மாத விற்பனையை ஒப்பிடும் போது 251.7 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி இரண்டிலும் வளர்ச்சியை பெற்றுள்ளது.

Tata Motors Sales January 2026

இவி விற்பனையிலும் இந்நிறுவனம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம் வெறும் 5240 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில் தற்போது 9052 கார்கள் விற்பனையாகியுள்ளது. 72.7 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது.

இதில் நெக்ஸான் கார் தான் சிறப்பாக விற்பனையாகியுள்ளது. மொத்தம் 23000 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையானது கடந்த ஜனவரி மாதம் தான். இதன் மூலம் இந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 10 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையை கடந்துள்ளது.

Tata Motors Sales January 2026

அடுத்ததாக டாடா பஞ்ச் காரும் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. ஒரே மாதத்தில் 19000 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் 7 லட்சம் கார்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனையை வெறும் 4 ஆண்டும் 3 மாதத்தில் செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் சிறப்பான விற்பனையை வளர்ச்சி பெற்ற மாதமாக கடந்த ஜனவரி மாதம் இருந்துள்ளது. 2026ம் முதல் மாதமே நல்ல மாதமாக அந்நிறுவனத்திற்கு அமைந்துள்ளது. தொடர்ந்து இந்நிறுவனம் வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம். இதற்கு ஏற்றார் போல பல புதிய தயாரிப்புகள் களத்திற்கு வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 1, 2026, 17:15 [IST]
English summary
Tata motors sales january 2026 record 71000 units
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X