62 ஆயிரம் கஸ்டமர்களை ஒரே மாதத்தில் பெற்ற டாடா! கார் விற்பனை டாப் கியரில்!

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் (TMPV) நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 63,083 கார்களை விற்பனை செய்து ஒட்டுமொத்த வாகன சந்தையையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2025 ஜூன் மாத விற்பனையான 37,237 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், இது யாரும் எதிர்பார்க்காத வகையில் 69 சதவீத அசுர வளர்ச்சி ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தைப் போலன்றி, டாடா மோட்டார்ஸ் பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில்லை என்றாலும், கடல்கடந்த சந்தையிலும் இந்த முறை பெரும் மிரட்டலான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக விற்கப்பட்ட 63,083 டாடா கார்களில் 62,076 கார்கள் உள்நாட்டிலும், மிகக் குறைந்த அளவாக 1,007 கார்கள் மட்டுமே ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன.

tata motors car sales

எண்ணிக்கையில் ஏற்றுமதி குறைவாக இருந்தாலும், கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் வெறும் 154 டாடா கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த முறை ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட மிக வியக்கத்தக்க வகையில் 554% உயர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல, 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு (2026 ஏப்ரல்- ஜூன்) விற்பனை எண்களும் பார்ப்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டில் மட்டும் 1,80,166 கார்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டின் முதல் காலாண்டுடன் (1,23,839 யூனிட்கள்) ஒப்பிடுகையில் சுமார் 45% வளர்ச்சியை டாடா பதிவு செய்துள்ளது. ஏற்றுமதித் துறையிலும் கடந்த ஆண்டை விட 148% என்கிற அபாரமான வளர்ச்சியை எட்டி, 970 யூனிட்களில் இருந்து 2,408 யூனிட்களாக உயர்ந்துள்ளது.

tata motors car sales

இதன் மூலம், முந்தைய ஆண்டின் முதல் காலாண்டின் விற்பனையான 1,24,809 யூனிட்களைத் தாண்டி, இந்த காலாண்டில் ஒட்டுமொத்தமாக 1,82,574 கார்களை விற்று 46% பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டி அசத்தியுள்ளது டாடா. இந்த ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) கார் மாடல்களின் புதிய ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகள் மற்றும் அவற்றின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் வாடிக்கையாளர்களிடையே பெரும் அலையையும், ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளன.

டாடா மோட்டார்ஸின் அனைத்து வகையான என்ஜின் மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக நிறுவனம் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது. அதே சமயம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய டாடா சியரா (Tata Sierra) மாடலுக்கான முன்பதிவுகளும், ஆர்வமும் மிக அதிகமாக இருந்தபோதிலும், சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட சில தடைகள் காரணமாக முதலாம் காலாண்டில் அதன் விநியோகம் சற்று பாதிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த குறையைத் தீர்த்து சியரா கார் டெலிவிரிகளை மிக விரைவில் அதிகரிக்க டாடா நிறுவனம் தனது வெண்டர்களுடன் முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. டாடாவின் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவை (EV) நோக்கி வாடிக்கையாளர்கள் ஆர்வமாகப் படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 14,800 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து, வரலாற்றிலேயே மிக அதிகமான மாதாந்திர இவி விற்பனையைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

Business Units/Segments June 2026 June 2025 Diff
Domestic Sales 62,076 37,083 24,993
Exports 1,007 154 853
Total Sales 63,083 37,237 25,846

இது கடந்த 2025 ஜூன் மாத விற்பனையான 5,228 யூனிட்களை விட 183% அதிகம் என்பது ஆச்சரியத்தை கூட்டுவதாக உள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டும் அடங்கும். மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடாவின் ஒட்டுமொத்த இவி விற்பனை முந்தைய ஆண்டின் 16,231 யூனிட்களில் இருந்து 112% உயர்ந்து 34,467 யூனிட்களை எட்டியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நேற்று அறிமுகம் செய்யப்பட்ட சியரா.இவி (Sierra.ev) உட்பட, இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் தன்வசம் 7 எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டு தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது டாடா மோட்டார்ஸ். இந்தியாவின் மிகப்பெரிய இவி தயாரிப்பு வரிசையைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், வரும் மாதங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சஃபாரி.இவி (Safari.ev) காரையும், அதனைத் தொடர்ந்து 2027இல் அவின்யா (Avinya) பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதனால், எலெக்ட்ரிக் வாகன உலகையே மாற்றியமைக்கக் போகும் டாடாவின் அடுத்தடுத்த ஆச்சரியமூட்டும் நகர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன என்கிற உலகளாவிய எதிர்பார்ப்பு இப்போதே பற்றிக் கொண்டுள்ளது.

Article Published On: Thursday, July 2, 2026, 11:39 [IST]
English summary
Tata motors sales report of 2026 june domestic sales and exports
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out