மழை வெள்ளம் புகுந்ததால் டாடா கார் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்... டெலிவிரியில் தாமதம் ஏற்படுமா?

மழை வெள்ளம் புகுந்ததால் குஜராத்தில் உள்ள டாடா கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், கார் டெலிவிரிப் பணிகளில் சிறிய அளவிலான தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டை பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. அங்குதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களான டியாகோ, டிகோர், நெக்ஸான் மற்றும் சியாரா கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

Tata Nexon Sanand Plant

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டாடா ஆலை செயல்பட்டு வரும் சனந்த் தொழிற்பேட்டை பகுதியிலும் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கார் உற்பத்திப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

டாடா கார் ஆலை மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் உதிரிபாகங்களை சப்ளை செய்யும் ஆலைகளும் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உதிரிபாகங்கள் சப்ளையிலும் தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இதனால், டாடா டியோகா, டிகோர், நெக்ஸான் மற்றும் சியாரா உள்ளிட்ட கார்களை புக்கிங் செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் கார்களை டெலிவிரி கொடுப்பதில் சிக்கலாக சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறிய தாமதம் மட்டுமே ஏற்படும் என்று தெரிகிறது. உற்பத்தியை விரைவாக தொடங்குவதற்கான பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர. அடுத்த சில நாட்களுக்குள் உற்பத்திப் பணிகள் இயல்பு நிலைக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய தகவல்களின்படி, இந்த பாதிப்பு தற்காலிகமானதாகவே இருக்கும் என்பதால் உடனடியாக டெலிவிரியில் எந்த தாக்கமும் இருக்காது. ஆனால், சில வேரியண்ட்டுகளின் வெயிட்டிங் பீரியட் சற்றே அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர்.

டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஏற்பட்டுள்ள உற்பத்திப் பாதிப்பு கார் டெலிவிரியில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதலாம். அதேநேரத்தில், சியாரா, நெக்ஸான், டிகோர், டியாகோ கார்களின் சில வேரியண்ட்டுகளின் டெலிவிரியில் சிறிய அளவிலான தாமதம் ஏற்படலாம். இதுகுறித்து புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு டாடா டீலர்கள் மூலமாக உரிய தகவல் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதுபற்றி வாடிக்கையாளர்கள் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை என்று கூறலாம்.

Article Published On: Thursday, July 30, 2026, 11:59 [IST]
English summary
Tata motors sanand plant production halted due to gujarat floods nexon tiago sierra
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out