மேட்-இன்-இந்தியா லாரிகளுக்கு வெளிநாட்டில் கிடைக்கும் மரியாதை... டாடாவுக்கு ஆர்டர் மேல் ஆர்டர் குவியுது!!

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (Tata Motors Limited) தனது துணை நிறுவனமான பி.டி டாடா மோட்டார்ஸ் டிஸ்ட்ரிபூசி இந்தோனேசியா (PT Tata Motors Distribusi Indonesia) வாயிலாக, இந்தோனேசியாவில் இதுவரை இல்லாத மிக அதிக எண்ணிக்கையிலான வணிக வாகனங்களுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இந்தோனேசியா நாட்டின் விவசாய நடவடிக்கைகளையும் கிராமப்புற ஏற்றுமதி, இறக்குமதிகளையும் மேம்படுத்த 70,000 வாகனங்களை டெலிவிரி செய்ய இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த வாகனங்கள் அந்த நாட்டின் கிராமப்புற பண்ணைகளில் இருந்து சந்தைகளை இணைக்கும் சாலை நெட்க்வொர்க்கை வலுப்படுத்தி, பிராந்திய அளவில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, டாடா யோதா (Yodha) என்கிற பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனங்கள் 35,000 யூனிட்களும், டாடா அல்ட்ரா டி.7 (Ultra T.7) டிரக்குகள் 35,000 யூனிட்களும் டெலிவிரி செய்யப்படவுள்ளன.

tata motors 70000-vehicle indonesia order

இந்தோனேசிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பி.டி அக்ரினாஸ் பங்காங் நுசந்தாரா (PT Agrinas Pangan Nusantara) என்கிற நிறுவனத்திற்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. விவசாய விநியோகச் சங்கிலிகளை நவீனமயமாக்குதல், கிராமப்புற கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துதல் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய மிக முக்கியமான இலக்குகளை பி.டி அக்ரினாஸ் பங்காங் நுசந்தாரா கொண்டுள்ளது.

இந்தோனேசியாவின் 'கோபெரசி டேசா மற்றும் கேலூரஹான் மேரா புடி திட்டம்' (Koperasi Desa and Kelurahan Merah Putih Project)-இன் கீழ் இந்த வாகனங்கள் டெலிவிரி (Delivery) செய்யப்பட உள்ளன. கடும் சவாலான சூழல்களிலும் நம்பகத்தன்மையுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட டாடா யோதா மற்றும் அல்ட்ரா டி.7 வாகனங்கள், போக்குவரத்து செலவுகளைக் குறைத்து, விவசாயப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை திறமையாக கொண்டு செல்ல உதவும்.

tata motors 70000-vehicle indonesia order

பல தீவுகள் அடங்கிய இந்தோனேசியாவின் பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் பயன்பாட்டுச் சூழல்களுக்கு ஏற்றவாறு இவற்றின் நீடித்துழைக்கும் தன்மை, தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் குறைவான செலவில் இயங்கும் தன்மை ஆகியவை உள்ளன என்று டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது. டாடா யோதா, பண்ணைகளையும் கிராமங்களையும் நகர சந்தைகளுடன் இணைக்கும் ஒரு வலிமையான 'லாஸ்ட்-மைல்' (Last-mile) போக்குவரத்துத் தீர்வாக இருக்கும்.

அதேசமயம், அல்ட்ரா டி.7, நவீன ஏற்றுமதி & இறக்குமதி தேவைகளுக்கு ஏற்ப, நீடித்துழைக்கும் தன்மை, ஓட்டுநர் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற, கிராமப்புற சாலைகளில் நம்பகமான செயல்திறனை வழங்கக்கூடியது ஆகும். 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் டாடா மோட்டார்ஸ், ஒரு டன்னுக்கும் குறைவான சரக்கு வாகனங்கள் முதல் 60 டன் வரையிலான கனரக வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துத் வாகனங்கள் வரை ஒரு பெரிய தயாரிப்புப் பட்டியலைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தோனேசிய அரசாங்கம் சார்பில் சமீபத்தில்தான் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து 35 ஆயிரம் கமர்ஷியல் வாகனங்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த ஒப்பந்தத்தின் மூலம் டாடா மோட்டார்ஸ் தனது உலகளாவிய கமர்ஷியல் வாகன இருப்பை மேலும் வலுப்படுத்தி, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த சந்தைகளுக்கு நம்பகமான, நோக்கம் சார்ந்த போக்குவரத்துத் தீர்வுகளை வழங்கும் இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்துகிறது.

இந்தத் திட்டம், இந்தோனேசியா நாட்டின் கிராமப்புற இணைப்பு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய தேசக் கட்டமைப்புக் கழகம் ஆகும். பல்வேறு பிராந்தியங்களில் சீரான செயல்பாடு மற்றும் நீண்டகால தாக்கத்தை உறுதிசெய்யும் வகையில், இந்த வாகனங்கள் படிப்படியாக விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 10, 2026, 23:09 [IST]
English summary
Tata motors secures 70000 vehicle indonesia order for yodha and ultra t7
மேலும்... #tata motors #commercial vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+