டாடா ஷோரூம்கள் கடந்த பல நாட்களா காலியா இருக்குறது இதனால் தானா... அவரே சொல்லிட்டாரா!!

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன லிமிடெட் (Tata Motors Passenger Vehicle Limited) நிறுவனம் 2025 டிசம்பர் மாத உள்நாட்டில் பயணிகள் கார்கள் விற்பனை எண்ணிக்கையில் 50,046 யூனிட்டுகளை எட்டியதாக அறிவித்துள்ளது. இது 2024 டிசம்பர் மாதத்தில் பதிவான 44,230 யூனிட்டுகளை விட 13.1 சதவீதம் அதிகமாகும்.

ஏற்றுமதி எண்ணிக்கையையும் சேர்த்து, கடந்த மாதத்தின் மொத்த பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 50,519 யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 44,289 யூனிட்டுகளாக இருந்தது. 2025-26ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர்- டிசம்பர்), டாடா நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மொத்தம் 171,013 பயணிகள் கார்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

tata motors december 2025 car sales

இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவான 139,829 யூனிட்டுகளை விட மிகவும் அதிகமாகும். கடந்த 3 மாத காலகட்டத்தில், உள்நாட்டு அளவில் 168,616 கார்களையும், சர்வதேச அளவில் 2,397 கார்களையும் விற்பனை செய்துள்ளது. குறிப்பாக, 2024-25ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 405 யூனிட்டுகளாக இருந்த டாடாவின் வெளிநாட்டு ஏற்றுமதி எண்ணிக்கை 2025-26ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 2,397 யூனிட்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும், மூன்றாம் காலாண்டில் டாடாவின் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 24,103 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 16,119 யூனிட்டுகளாக இருந்தது. மேலும், டாடா எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் 6,906 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

tata motors december 2025 car sales

இது முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பதிவான 5,562 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஷைலேஷ் சந்திரா இதுகுறித்து கூறுகையில், 2025ஆம் ஆண்டில் டாடா நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சாதனை ஆண்டு விற்பனையைப் பதிவு செய்து வருகிறது.

மொத்தம் 587,218 டாடா கார்கள் விற்பனையாகிய நிலையில், இதில் 81,125 எலெக்ட்ரிக் கார்கள் அடங்கும். 2025-26ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி 2.0 திருத்தம், மூன்றாம் காலாண்டில் விற்பனை வளர்ச்சியை மேம்படுத்த உதவியது என்று அவர் குறிப்பிட்டார். இதனால் மொத்த விற்பனை 171,103 யூனிட்டுகளை எட்டியதுடன், சில்லறைப் பதிவுகளும் முதல் முறையாக 200,000 யூனிட்டுகளைத் தாண்டின.

tata motors december 2025 car sales

கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் டாடா கார்கள் விற்பனையில் 2024 டிசம்பரை காட்டிலும் 22 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது என்றும், சில்லறை விற்பனை மொத்த விற்பனையை மிஞ்சியதால், டீலர்களிடம் உள்ள இருப்பு சுமார் 18 நாட்களாகக் குறைந்துள்ளது என்றும் சந்திரா தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த டாடா எஸ்யூவி கார்கள் விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், டாடா எலெக்ட்ரிக் வாகன விற்பனை சுமார் 50 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2025-26ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், டாடா சிஎன்ஜி (CNG) கார்கள் விற்பனை 47,000 யூனிட்டுகளைக் கடந்துள்ளது. கடந்த காலாண்டில், டாடா சியாரா (Sierra) போன்ற புதிய தயாரிப்புகளும், ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) கார்களின் புதிய பெட்ரோல் மாடல்களும் டாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

tata motors december 2025 car sales

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்வரும் 2025-26ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தயாரிப்புகளின் டெலிவிரிகள் (Deliveries) தொடங்கும் என்றும், ஆண்டு முழுவதும் மேலும் பல வெளியீடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தலைமை செயல் அதிகாரி ஷைலேஷ் சந்திரா நம்பிக்கையுடன் கூறியிருப்பதால், 2026ஆம் ஆண்டில் கார்கள் மார்க்கெட்டில் டாடாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 1, 2026, 20:13 [IST]
English summary
Tata motors sold more than 50 thousand cars in december 2025 check all details here
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X