டாடா கார் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாள் வரப்போகிறது... ஜூன் 30 வரை வெயிட் பண்ணா போதும்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ஜூன் 30ஆம் தேதி அன்று தனது ஏழாவது எலெக்ட்ரிக் காராக 'சியரா இவி' (Sierra EV) மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யவுள்ளது. ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காருக்கு கீழான பிரிவில் களமிறங்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆனது டாடா கார் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாடா நிறுவனத்தில் தற்போதைக்கு சஃபாரி மற்றும் அல்ட்ரோஸ் கார்கள் மட்டுமே இன்னும் எலெக்ட்ரிக் கார்களாக அறிமுகம் செய்யப்படாமல் உள்ளன. இதில் சஃபாரி இவி விரைவில் பிராண்டின் முதன்மையான 7-சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாகவே சியரா இவி காரின் முன்பக்க தோற்றத்தைக் காட்டும் முதல் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

tata motors teased sierra ev

வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ டீசர் படம் இருண்ட பின்னணியில் சியரா இவி கார் நிற்பது போன்று காட்டப்பட்டுள்ளதால், சியரா பெட்ரோல்/ டீசல் மாடலுடன் இதை முழுமையாக ஒப்பிடுவது சற்று கடினமாக உள்ளது. இருந்தாலும், சியரா இவி காரில் சில வியக்கத்தக்க மாற்றங்கள் ஒளிந்திருக்கின்றன. சியரா இவி-இன் முன் பகுதியில் கருப்பு நிற ஹைலைட்களுக்கு பதிலாக, காரின் உடல் நிறத்திலேயே நேர்த்தியான எலிமெண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது காருக்கு ஒரு பிரீமியம் மற்றும் தூய்மையான தோற்றத்தைத் தருகிறது. டீசரை சற்று உற்று நோக்கினால், கிளாம்ஷெல் பொனெட், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் (connected LED DRLs), மெலிதான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் கார்னரிங் விளக்குகளுடன் கூடிய செங்குத்தான எல்இடி ஃபாக் லைட்கள் ஆகியவை அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன.

tata motors teased sierra ev

முன்பக்க பம்பரில் உள்ள புல்-பார் போன்ற சில்வர் எலிமெண்ட்டும் சியராவின் இரு பதிப்புகளிலும் பொதுவானதாகவே வழங்கப்பட உள்ளது. டீசரில் காட்டப்பட்டுள்ள கிராபிக்ஸ் தகவல்களின்படி, இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் டாடா லோகோவைச் சுற்றி வெள்ளை நிற வேலைப்பாடுகளும், Tata.ev பேட்ஜ்களைச் சுற்றி நீல நிற ஹைலைட்களும் இருக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும், பன்ச் இவி மற்றும் டியாகோ இவி எலெக்ட்ரிக் கார்களில் உள்ளதை போன்று சாம்பல் நிற பிளாஸ்டிக் எலிமெண்ட்களும் சியரா இவி காரில் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்த காரின் உட்புறத்தில் இடம்பெற்றிருக்கும் சொகுசு அம்சங்கள் என்று பார்த்தால், டாடா மோட்டார்ஸ் பொதுவாக தனது எலெக்ட்ரிக் கார்களிலும், பெட்ரோல்/ டீசல் கார்களிலும் உட்புற அமைப்பை ஒரே மாதிரியாகவே வடிவமைக்கும்.

நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை மட்டுமே இதற்கு ஒரு சிறிய விதிவிலக்கு ஆகும். அதேபோல், சியரா இவி எலெக்ட்ரிக் காரும் சியரா பெட்ரோல்/ டீசல் காரின் சொகுசான உட்புற அமைப்பையே அப்படியே பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நம்மை வியப்பில் ஆழ்த்தப்போகும் ட்ரிபிள்-ஸ்கிரீன் டாஷ்போர்டு டிசைன், அதிநவீன சவுண்ட்பார், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரீமியம் JBL ஸ்பீக்கர்கள் மற்றும் மென்மையான சாஃப்ட்-டச் மெட்டீரியல்கள் இடம்பெறப் போகின்றன.

சியரா இவி காரானது டாடா கர்வ் இவி காரை விட, ஹாரியர் இவி-யின் சக்திவாய்ந்த பவர்டிரெயினையே பெற்றுவரப் போகிறது என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இதில் மிகப்பெரிய 75 kWh பேட்டரி பேக் இடம்பெறலாம். மேலும், டூயல்-மோட்டார் QWD செட்-அப் உடன் அதிகபட்சமாக 500 என்எம் (Nm) டார்க் திறன் வரை வெளிப்படுத்தும் அசுர சக்தியையும் இந்த எஸ்யூவி கார் நமக்கு வழங்கக்கூடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜூன் 30 அன்று சந்தையில் முறைப்படி களமிறங்கும் டாடா சியரா இவி, நேரடியாக மஹிந்திரா BE 6 எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. நெக்ஸான் இவி, பன்ச் இவி, டியாகோ இவி, கர்வ் இவி மற்றும் ஹாரியர் இவி என ஏற்கனவே வலுவாக இருக்கும் டாடாவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரக்ள் குடும்பத்தில், இந்த புதிய சியரா இவி எந்த மாதிரியான புதிய சாதனைகளைப் படைக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Article Published On: Saturday, June 20, 2026, 15:58 [IST]
English summary
Tata motors teased sierra ev electric car ahead of june 30 launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out