4.5 லட்ச ரூபாயில் விற்கப்படும் காரை புதிய தோற்றத்திற்கு மாற்றும் டாடா! இன்னும் ஒரு வாரத்தில் கார் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருகிற மே 28ஆம் தேதி புதிய மேம்படுத்தப்பட்ட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் டியாகோ காரின் முன் மற்றும் பின்பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்பக்கத்தில் என்னென்ன புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை சில தினங்களுக்கு முன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது, டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற கேபினில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. புதிய டியாகோ காரின் உட்புற கேபின் ஆனது முன்பை விட நேர்த்தியான தோற்றத்தில், பிரீமியம் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

tata motors teased tiago facelift

கேபினுக்குள் டாஷ்போர்டு ஆனது லேயர் லேயராக உள்ளது. துணியால் ஆன இன்செர்ட்கள் டாஷ்போர்டின் மீது காரின் முழு அகலத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் இருந்து, துணியால் ஆன மெட்டீரியல்கள் மூலம் புதிய டியாகோ காரின் கேபின் லுக்கை மாடர்ன் தரத்தில் வழங்க டாடா மோட்டார்ஸ் விரும்புவது தெளிவாக தெரிகிறது.

டாஷ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை போன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையும் காற்றில் மிதக்கும் எஃபெக்ட்டில் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய டியாகோ காரில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஆனது குழி போன்ற டிசைனுக்குள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்ஃபோடெயின்மெண்ட் திரையின் அளவில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், இந்த திரையை சுற்றிலும் டாஷ்போர்டில் வழங்கப்படும் டிசைன்கள் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளன.

tata motors teased tiago facelift

HVAC ஃபங்க்‌ஷன்களுக்கான கண்ட்ரோல்கள் வழக்கம்போல் அழுத்தக்கூடிய பொத்தான்களாக வழங்கப்பட்டுள்ளன. டாஷ்போர்டுக்கு கீழே செண்டர் கன்சோல் பகுதி ஆனது முற்றிலும் புதிய டிசைனில் உள்ளது. ஆனால், வழக்கமான கியர் லிவருக்கு பதிலாக சுழற்றக்கூடிய டிரைவ் செலெக்டர் புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான சுழற்றக்கூடிய டிரைவ் செலெக்டர் தான் சமீப கால மாடர்ன் டாடா எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பாக வெளியிட்டுள்ள டீசர் படத்தில் ஸ்டீயரிங் சக்கரத்தில் பெடில் ஷிஃப்டர்களை காணலாம். இதன் மூலம், புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது உறுதியாகிறது. மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பேடிற்கு அருகே போனை வைப்பதற்கான டிரே புதியதாக வழங்கப்பட்டுள்ளதை டீசர் படத்தில் காணலாம்.

யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி ஆனது முன் மற்றும் பின் இருக்கை வரிசை என இரு இருக்கை வரிசைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில், 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் அடங்கியுள்ளது. டியாகோ காருக்குள் நம்மை வசீகரிக்கக்கூடிய மற்ற விஷயங்கள் என்று பார்த்தால், புதிய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் உட்புற கதவுகளுக்கான பேட்கள் ஆகும்.

முன் இருக்கை பயணிகள் ஓய்விற்காக கை வைக்கும் பகுதி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளுக்கான ஸ்விட்ச்கள் உள்ளிட்டவை டாடா சியரா காரில் உள்ளதை போன்று உள்ளன. ஒட்டுமொத்தமாக கேபின் புதிய இரு நிறங்களில் உள்ளது. இருக்கைகள் மற்றும் டாஷ்போர்டு பகுதிகளில் பளிச்சிடும் நிறங்களிலான ஷேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார்களுள் ஒன்று, டியாகோ ஆகும். ஆனால், சமீப மாதங்களாக இதன் விற்பனை குறைந்து வருவதை அடுத்து டியாகோவிற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்க டாடா நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரின் மூலமாக புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புறம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஒரு பார்வை நமக்கு கிடைத்துள்ளது.

Article Published On: Saturday, May 23, 2026, 20:03 [IST]
English summary
Tata motors teased tiago facelift interior ahead of may 28 launch
மேலும்... #tata motors #tiago #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+