விஸ்வரூபம் எடுக்கும் டாடா! இந்த 2 காரும் திரும்ப வர போகுதா! வெறித்தனமான சம்பவம் லோடிங்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 9 ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் வரும் 2031ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக புதிதாக 6 ஐசி இன்ஜின் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் 2031ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களின் எண்ணிக்கை 15 ஆக உயரவுள்ளது.
மறுபக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 6 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் வரும் 2031ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக புதிதாக 4 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் 2031ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 10 ஆக உயரவுள்ளது.

ஒட்டுமொத்தமாக (ஐசி இன்ஜின் + எலெக்ட்ரிக்) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் 15 கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் வரும் 2031ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக இந்த எண்ணிக்கை 25 ஆக உயரவுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலிமையாக்கி கொள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் யூகத்தின் அடிப்படையில் ஒரு சில தகவல்கள் நமக்கு தெரிய வந்துள்ளன. முதலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஐசி இன்ஜின் கார்களை பற்றிய தகவல்களை பார்த்து விடலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2031ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக 6 ஐசி இன்ஜின் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என நாங்கள் கூறியிருந்தோம் அல்லவா? இதில் 2 கார்களை பற்றிய தகவல்கள் மட்டும் நமக்கு கிடைத்துள்ளன. இதில் ஒரு கார், எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் 'டாடா ஸ்கார்லெட்' (Tata Scarlet) என்ற குறியீட்டு பெயரில் இது அழைக்கப்படுகிறது.
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger) காருக்கு இது போட்டி மாடலாக இருக்கும். அத்துடன் மஹிந்திரா விஷன் எஸ் (Mahindra Vision S) கான்செப்ட் அடிப்படையில் விற்பனைக்கு வரவுள்ள காருக்கும் இது நேரடி போட்டியாக இருக்கும். மற்றொரு கார், எம்பிவி ரகத்தை சேர்ந்ததாக இருக்கும் என தெரிகிறது.
தற்போது விற்பனையில் உள்ள டாடா சியரா (Tata Sierra) கார் உருவாக்கப்பட்டுள்ள அதே அர்கோஸ் பிளாட்பார்ம் (ARGOS Platform) அடிப்படையில் இந்த எம்பிவி கார் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் 4.6 மீட்டர்கள் நீளம் வரை கொண்ட கார்களை உருவாக்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சரி, அடுத்ததாக எலெக்ட்ரிக் கார்களுக்கு வருவோம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2031ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக 4 புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என கூறியிருந்தோம் அல்லவா? இதில் ஒரு எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டது.
அது டாடா சியரா இவி (Tata Sierra EV) ஆகும். வரும் ஜூன் 30ம் தேதி இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எஞ்சிய 3 எலெக்ட்ரிக் கார்களை பற்றிய உறுதியான தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் இதில் ஒன்று டாடா ஸ்கார்லெட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம். மற்றொன்று டாடா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள அவின்யா (Avinya) பிராண்டின் கீழ் வரும் ஒரு எலெக்ட்ரிக் காராக இருக்கலாம்.
அதே நேரத்தில் மற்றொன்று டாடா சஃபாரி இவி (Tata Safari EV) எலெக்ட்ரிக் காராக இருக்கலாம் என தெரிகிறது. இதில், டாடா சியரா மற்றும் டாடா சஃபாரி ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கார்களாக இருந்தன. இந்த 2 கார்களையும் தெரியாதவர்களே இருக்க முடியாது என்னும் அளவிற்கு அவை பிரபலம்.
அவற்றின் ஐசி இன்ஜின் வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது. இதை தொடர்ந்து அவற்றின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொள்ள இந்த புதிய கார்கள் உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் உங்களை போலவே நாங்களும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருங்கால தயாரிப்புகளை காண ஆர்வமாக உள்ளோம்.


Click it and Unblock the Notifications