பண்டிகை கால ஸ்பெஷல்... ரூ.9.99 லட்சத்தில் டாடா நெக்ஸான் CAMO எடிஷன் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவிகளில் ஒன்றான டாடா நெக்ஸான், தொடர்ந்து புதிய வேரியண்ட்டுகள் மற்றும் சிறப்பு எடிஷன்கள் மூலம் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தற்போது நெக்ஸான் CAMO என்ற ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எடிஷன், வழக்கமான நெக்ஸானைவிட வித்தியாசமான தோற்றத்துடன் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளையும் வழங்குகிறது.

புதிய டாடா நெக்ஸான் கேமோ எடிஷனின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.13.94 லட்சம் வரை விலை செல்கிறது. இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலானது Creative, Creative+ S, Creative+ PS, Fearless+ PS மற்றும் Fearless+ A PS என பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. கேமோ எடிஷன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற சிறப்பம்சங்கள்

டாடா நெக்ஸான் கேமோ எடிஷனில் இரண்டு புதிய பிரத்யேக வெளிப்புற வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மூணாறு மிஸ்ட் மற்றும் கூர்க் க்ளவுட் ஆகியவை இந்த எடிஷனின் தனித்துவமான வண்ணத் தேர்வுகளாக உள்ளன. முன்பக்க ஃபெண்டர்களில் கேமோ பேட்ஜிங் மற்றும் முன்பக்க இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்டுகளில் கேமோ தீம் கொண்ட வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

வெறும் வண்ணத் தேர்வு மாற்றத்துடன் நிறுத்தாமல், கேபினிலும் சில முக்கியமான அப்டேட்களை டாடா செய்துள்ளது. குறிப்பாக 10.25 இன்ச் டச் ஸ்கிரீனுக்கு பதிலாக 12.3 இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தொடர்ந்து இடம்பெறுகிறது.

முக்கிய வசதிகள்

கேமோ ஸ்பெஷல் எடிஷனில் கவனம் ஈர்க்கும் மற்றொரு வசதியாக இன்டகிரேட்டட் டேஷ்கேம் குறிப்பிடலாம். இது காரின் 360 டிகிரி கேமரா அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் தனியாக டேஷ்கேம் பொருத்த வேண்டிய தேவையை குறைக்கிறது.

வேரியண்டைப் பொறுத்து பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், 9-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, வயர்லெஸ் சார்ஜர், கனெக்டட் கார் வசதிகள் உள்ளிட்ட அம்சங்களும் கிடைக்கின்றன. 360 டிகிரி கேமரா, Blind View Monitor மற்றும் ADAS போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் உயர்நிலை வேரியண்ட்களில் இடம்பெறுகின்றன.

எஞ்சினில் மாற்றம் இல்லை

கேமோ எடிஷனில் எஞ்சின் தேர்வுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான நெக்ஸானில் இடம்பெறும் அதே மூன்று பவர்டிரெயின் தேர்வுகள் தொடர்கின்றன. இதன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120எச்பி பவரையும் 170என்எம் டார்க்கையும் வழங்குகிறது. அடுத்து, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 115எச்பி பவர் மற்றும் 260என்எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது. சிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100எச்பி பவர் மற்றும் 170என்எம் டார்க்கையும் வழங்குகிறது. மேலும், 6-ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் 7-ஸ்பீடு டிசிஏ ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வேரியண்டைப் பொறுத்து வழங்கப்படுகின்றன.

விலை விபரம்

பெட்ரோல் மேனுவல் கொண்ட Creative Camo பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், பெட்ரோல் DCA உடன் Fearless+ A PS Camo டாப் வேரியண்ட் ரூ.13.94 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. மொத்தத்தில், நெக்ஸான் கேமோ எடிஷனில் பெரிய அளவிலான எஞ்சின் மாற்றங்களைச் செய்யாமல், தோற்றம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் டாடா மோட்டார்ஸ் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக பெரிய 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஒருங்கிணைந்த டேஷ்கேம் போன்ற வசதிகள் இந்த ஸ்பெஷல் எடிஷனை வழக்கமான நெக்ஸானில் இருந்து தனித்துக் காட்டுகின்றன.

Article Published On: Saturday, August 8, 2026, 10:42 [IST]
English summary
Tata nexon camo edition launched rs 9 99 lakh features price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X