ஒரே மாதத்தில் 23 ஆயிரம் பேர் வாங்கும் அளவுக்கு கஸ்டமர்ஸை ஈர்க்கும் டாடா கார்! மாருதி கார் கூட இந்த அளவுக்கில்ல
புதிய ஆண்டின் முதல் மாதமான 2026 ஜனவரியில் வெளியான முதல் 25 அதிகம் விற்பனையான கார் பட்டியலில், எஸ்யூவி (SUV) ரக கார்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது உறுதியாகியுள்ளது. மற்ற வகை மாடல் கார்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டாடா நெக்ஸான் (Tata Nexon), 23,365 யூனிட்கள் விற்பனையுடன் 2026 ஜனவரியில் ஒட்டுமொத்த கார்கள் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 52 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.
டாடா நெக்ஸான் காம்பாக்ட் எஸ்யூவியின் பாதுகாப்பு மதிப்பீடுகள், எலக்ட்ரிக் மற்றும் வழக்கமான எரிபொருள் ஆப்ஷன்கள் உள்ளிட்ட விரிவான பவர்டிரெய்ன் தேர்வுகள் மற்றும் தொடர்ச்சியான அப்கிரேட்கள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) 19,629 யூனிட்கள் விற்பனை உடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

புதிய தலைமுறை டிசையர் வருகையின் உதவியுடன் இது 2025 ஜனவரியை விட 28 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. டாடா பன்ச் (Tata Punch) 19,257 யூனிட்கள் விற்பனை உடன் மூன்றாம் இடத்தைப் பிடித்து, 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) 17,921 யூனிட்கள் விற்பனையுடன் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 3 சதவீத சிறிய சரிவைக் காட்டுகிறது. இருந்தாலும், கிரெட்டா இந்தியாவின் மிக முக்கியமான காம்பாக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), 2025 ஜனவரியில் விற்கப்பட்ட 14,248 யூனிட்களை காட்டிலும் அதிகமாக 17,892 யூனிட்கள் விற்கப்பட்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது 2025 ஜனவரியை விட 26 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கடந்த மாதம் 17,806 யூனிட்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இதற்கடுத்து பிரெஸ்ஸா (Brezza) மொத்தம் 17,486 யூனிட்கள் விற்பனை உடனும், 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தும் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆனால், பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் பலேனோ (Baleno) 2025 ஜனவரியை விட 16 சதவீதம் சரிந்து 16,782 யூனிட்டுகள் விற்பனையை எட்டியுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ 15,542 யூனிட்கள் விற்பனை உடன் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தவற்றில், மஹிந்திரா தார் (Mahindra Thar) விற்பனை 78 சதவீதம் உயர்ந்து 13,418 யூனிட்டுகளை எட்டியுள்ளது.

அதே நேரத்தில் மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero) விற்பனை 36 சதவீதம் அதிகரித்து 11,841 யூனிட்டுகளை எட்டியுள்ளது. புதிய தலைமுறை மாடல்களின் வருகையினால், கியா சொனெட் (Kia Sonet) 53 சதவீதமும், செல்டோஸ் (Seltos) 64 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளன. டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder) 85 சதவீத பிரம்மாண்ட வளர்ச்சியுடன் தனித்து நிற்கிறது.
மாருதி சுஸுகி வேகன்ஆர் விற்பனை 37 சதவீதம் சரிந்தாலும், ஆல்டோ கார் 8 சதவீதம் மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், ஈக்கோ (Eeco) வேன் தொடர்ந்து சீரான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. டாடா டியாகோ (Tata Tiago) விற்பனை 23 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) விற்பனை 7,978 யூனிட்களுடன் இந்த டாப்-25 கார்கள் பட்டியலை நிறைவு செய்துள்ளது. 2025 ஜனவரியில் அவ்ரா 5,388 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
| Rank | Model | Jan 2026 Sales | Jan 2025 Sales | YoY |
|---|---|---|---|---|
| 1 | Tata Nexon | 23,365 | 15,397 | 52% |
| 2 | Maruti Suzuki Dzire | 19,629 | 15,383 | 28% |
| 3 | Tata Punch | 19,257 | 16,231 | 19% |
| 4 | Hyundai Creta | 17,921 | 18,522 | -3% |
| 5 | Maruti Suzuki Ertiga | 17,892 | 14,248 | 26% |
| 6 | Maruti Suzuki Swift | 17,806 | 17,081 | 4% |
| 7 | Maruti Suzuki Brezza | 17,486 | 14,747 | 19% |
| 8 | Maruti Suzuki Baleno | 16,782 | 19,965 | -16% |
| 9 | Mahindra Scorpio | 15,542 | 15,442 | 1% |
| 10 | Maruti Victoris | 15,240 | 0 | – |
| 11 | Maruti Wagon R | 15,118 | 24,078 | -37% |
| 12 | Mahindra Thar | 13,418 | 7,557 | 78% |
| 13 | Maruti Suzuki Fronx | 13,353 | 15,192 | -12% |
| 14 | Hyundai Venue | 12,413 | 11,106 | 12% |
| 15 | Maruti Suzuki Alto | 12,314 | 11,352 | 8% |
| 16 | Maruti Suzuki Eeco | 11,914 | 11,250 | 6% |
| 17 | Mahindra Bolero | 11,841 | 8,682 | 36% |
| 18 | Kia Sonet | 10,998 | 7,194 | 53% |
| 19 | Kia Seltos | 10,639 | 6,470 | 64% |
| 20 | Mahindra XUV 7XO | 10,133 | 0 | – |
| 21 | Toyota Innova | 9,455 | 9,780 | -3% |
| 22 | Toyota Hyryder | 9,156 | 4,941 | 85% |
| 23 | Mahindra XUV 3XO | 8,845 | 8,454 | 5% |
| 24 | Tata Tiago | 8,349 | 6,807 | 23% |
| 25 | Hyundai Aura | 7,978 | 5,388 | 48% |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறிய இடைவெளிக்கு பிறகு டாடா நெக்ஸான் மீண்டும் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், டாடா மோட்டார்ஸின் மற்றொரு பிரபலமான காரான பன்ச் மாடலும் கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









