சன்ரூஃப் உடன் இதைவிட குறைந்த விலையில் கார் இல்ல... மிடில்-கிளாஸ் மக்களுக்காகவே டாடா உருவாக்கிய கார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபலமான நெக்ஸான் காரில் குறைந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப்-ஐ வழங்கும் விதமாக 'ப்யூர்+ PS' என்கிற புதிய வேரியண்ட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், நெக்ஸானின் புதிய ப்யூர்+ PS வேரியண்ட்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று, நெக்ஸான் ஆகும். இருப்பினும், இந்த காரில் பனோராமிக் சன்ரூஃப் சற்று விலைமிக்க வேரியண்ட்களில் தான் வழங்கப்பட்டு வந்தது. இன்றைய காலத்தில் கார் வாங்கும் பலரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்ட பனோராமிக் சன்ரூஃப் நெக்ஸானில் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது ஒரு குறையாகவே இருந்தது.

tata nexon pure ps variant car at dealership showrooms

இதனை நிவர்த்தி செய்யும் விதமாகவே ப்யூர்+ PS என்கிற புதிய வேரியண்டை நெக்ஸானில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்தியாவிலேயே பனோராமிக் சன்ரூஃப் உடன் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட முதல் மற்றும் தற்போதைக்கு ஒரே காராக டாடா நெக்ஸான் விளங்குகிறது.

இத்தகைய சிறப்புமிக்க நெக்ஸான் கார்கள் தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. தற்போது நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள படங்களில் காட்சித் தருவது 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை கொண்ட நெக்ஸான் ப்யூர்+ PS கார் ஆகும். இது இல்லாமல் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் நெக்ஸான் ப்யூர்+ PS கிடைக்கிறது.

tata nexon pure ps variant car at dealership showrooms

மேலும், நெக்ஸான் ப்யூர்+ PS ஐ-சிஎன்ஜி காரும் விற்பனை செய்யப்படுகிறது. சிஎன்ஜி ஆப்ஷனில் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் கார் கிடைக்கும். கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் நெக்ஸான் ப்யூர்+ PS காரை வாங்கலாம். ஆனால், நெக்ஸான் ப்யூர்+ PS ஐ-சிஎன்ஜி கார் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், நெக்ஸான் ப்யூர்+ PS கார் மிக முக்கியமாக பனோராமிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ளது. இந்த வேரியண்ட்டின் பெயரில் உள்ள PS என்பது பனோராமிக் சன்ரூஃப்-ஐ குறிப்பதே ஆகும். இந்த காரில் சன்ரூஃப்-ஐ குரல் மூலமாக கட்டுப்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

பனோராமிக் சன்ரூஃப் மட்டுமின்றி, க்ரூஸ் கண்ட்ரோல், பின்பக்க வைபர் & வாஷர் மற்றும் இரு ட்விட்டர்ஸ் உள்ளிட்டவையும் 2026 நெக்ஸான் ப்யூர்+ PS காரில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், நெக்ஸான் காரில் வழக்கமாக வழங்கப்படும் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன், வயர்லெஸ் போன் மிரரிங், தன்னிச்சையாக மடங்கக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளையும் இந்த காரில் பெறலாம்.

மேலும், உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, 6 ஏர்பேக்குகள், பின் இருக்கை வரிசைக்கும் ஏசி வெண்ட்கள், காரை சுற்றிலும் எல்இடி விளக்குகள், டிரைவ் மோட்கள் மற்றும் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை போன்றவையும் புதிய நெக்ஸான் ப்யூர்+ PS காரில் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.10 லட்சத்திற்குள் பனோராமிக் சன்ரூஃப் உடன் காரை வழங்குவதற்காகவே நெக்ஸானில் ப்யூர்+ PS வேரியண்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் லோயர் மிடில்-கிளாஸ் மக்களும் பனோராமிக் சன்ரூஃப் உணர்வை அனுபவிக்கலாம். தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளதால், புதிய டாடா நெக்ஸானில் ப்யூர்+ PS காரின் டெலிவிரிகள் விரைவாகவே துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Wednesday, May 13, 2026, 21:46 [IST]
English summary
Tata nexon pure plus ps variant arrived at dealership showrooms check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+