ரூ.3.45 லட்சம் வரையில் சலுகை விலையில் கிடைக்கும் டாடா எலெக்ட்ரிக் கார்

எலெக்ட்ரிக் கார் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்த ஏப்ரல் மாதம் இறங்கி வந்து அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்தியாவில் தற்போது அதிகளவிலான எலெக்ட்ரிக் கார் மாடல்களையும், ஒவ்வொரு மாதமும் அதிளவிலான எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து வருவது டாடா மோட்டார்ஸ். இந்த முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது.

குறிப்பாக இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் கூபே வகை எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான கர்வ் EV-க்கு ரூ.3.45 லட்சம் வரையிலான சலுகைகளை அந்நிறுவனம் இந்த ஏப்ரல் மாதம் வழங்குவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கர்வ் EV-க்கான சலுகைகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

Tata Curvv EV

உண்மையாகவே மேலே கூறியது போல கர்வ் EV மாடலுக்கு ரூ.3.45 லட்சம் வரையிலான சலுகைகளை வழங்கியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். ரூ.3 லட்சத்தை கிரீன் போனஸாகவும், ரூ.30,000-த்தை எக்ஸ்சேஞ்சு போனஸாகவும், ரூ.15,000-த்தை கார்ப்பரேட் சலுகையாகவும் என மொத்தம் ரூ.3.45 லட்சம் வரையிலான சலுகைகளை வழங்கியிருக்கிறது.

இந்த சலுகைகளை குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு என்று மட்டுமின்றி, கர்வ் EV எஸ்யூவி மாடலின் பெரும்பான்மையான வேரியன்ட்களுக்கு வழங்குகிறது டாடா. கர்வ் EV மாடலை, கிரியேட்டிவ் 45, அக்காம்ப்ளிஷ்டு 45, அக்காம்ப்ளிஷ்டு 55, அக்காம்ப்ளிஷ்டு+ 45, அக்காம்ப்ளிஷ்டு+ 55, எம்பவர்டு+ 55, எம்பவர்டு+ A 55, எம்பவர்டு+ A 55 டார்க் என எட்டு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

Tata Curvv EV offers

இதில் அடிப்படையான கிரியேட்டிவ் 45 வேரியன்டைத் தவிர்த்து மற்ற அனைத்து வேரியன்ட்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலான கிரீன் போனஸைக் கொடுக்கிறது டாடா மோட்டார்ஸ். அடிப்படையான கிரியேட்டிவ் 45 வேரியன்டனது ரூ.17.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. அதற்கு அடுத்த வேரியன்டானது ரூ.18.49 லட்சம் என்ற விலையைக் கொண்டுள்ளது. டாப் எண்டு வேரியன்டானது ரூ.22.24 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்டிருக்கும் சலுகைகள் மூலம் மிகவும் குறைவான விலையிலேயே புதிய கர்வ் EV எஸ்யூவி மாடலை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். இந்தியாவில் டாடா விற்பனை செய்து வரும் சிறப்பான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் கர்வ் EV-யும் ஒன்று. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிராண்டு எலெக்ட்ரிக், மாருதி e-விட்டாரா உள்ளிட்ட மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது டாடா கர்வ் EV.

இந்தக் காரில் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று 55 kWh, மற்றொன்று 45 kWh. இவையே வேரியன்ட்களின் பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 45 kWh பேட்டரி பேக்கானது 430 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக் கொண்ட கார்களில் 150 hp பவர் மற்றும் 215 Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

55 kWh பேட்டரி பேக்கானது 502 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருக்கும் வேரியன்ட்களில், 167 hp பவர் மற்றும் 215 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செட்டப்பானது மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 8.6 நொடிகளில் எட்டும் திறனையும் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.3 லட்சம் கிரீன் போனஸ் என்பது வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் தான். ஸ்டாக் உள்ளவரை மட்டுமே இந்த சலுகை கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. எனவே ஏற்கனவே இந்தக் காரை அல்லது ஒரு மிட்-சைஸ் எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள் டாடா கர்வ் EV-யை வாங்க சிறந்த நேரம் இது தான். சலுகைகளைக் கடந்து பல்வேறு வகையிலும் சிறப்பான வசதிகளைக் கொண்ட காராகவும் கர்வ் EV இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, April 13, 2026, 12:16 [IST]
English summary
Tata provides 3 lakh rupees green bonus for curvv ev this april 2026
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+