தினமும் 1500 பேர் இந்த காரை புக் பண்ணுறாங்க! 65 நாள் தவம் இருந்தா தான் கார் கிடைக்கும்!
இந்தியாவில் டாடா பஞ்ச் காருக்கு நீண்ட நாட்களாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.இந்த கார் நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில் இந்த காரின் புக்கிங் மற்றும் காத்திருப்பு காலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவானன விபரங்களை காலணாம் வாருங்கள்
டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் அந்நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யூவி கார் ஆகும். இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை சமீபத்தில் தான் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த காரில் ரூ5.59 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிவருகிறது.

இந்த காருக்கு நீண்ட நாட்களாக நல்ல புக்கிங் குவிந்து வரும் நிலையில் இது குறித்த முக்கியமான விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த காரை தினந்தோறும் 1500 பேர் இந்த காரை புக் செய்துள்ளனர். இது மட்டுமல்ல இந்த காரை வாங்க இன்று புக் செய்தால் 65 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த காரை 7 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். அதுவும் இந்த கார் அறிமுகமாகி வஎறம் 4 ஆண்டுகள் 3 மாதம் தான் ஆகிறது. அதற்குள் இத்தனை லட்சம் பேர் இந்த காரை வாங்கிவிட்டனர். கடந்த 2025ம் ஆண்டு மட்டும் மொத்தம் 1.73 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது.

இதில் அக்கம்பிளீஷ்டு வேரயின்டிற்கு 30 நாட்களும், அட்வெஞ்சர் வேரியன்டிற்கு 50 நாட்களும், ப்யூர்+ வேரியன்டிற்கு 60 நாட்களும், ப்யூர் வேரியன்டிற்கு 60 நாட்களும், ஸ்மார்ட் வேரியன்ட்டிற்கு 65 நாட்களும் காத்திருப்பு காலம் இருக்கிறது. அதாவது 30-65 நாட்கள் புக் செய்தபிறகு காத்திருந்தால் மட்டுமே இந்த கார் கிடைக்கும்.
2026 டாடா பஞ்ச் காரின் வடிவமைப்பு பாக்ஸி வடிவமைப்பில் காம்பேக்ட் லுக் உடன் வருகிறது. இதில் ஷார்ப்பான லுக், ஸ்லிம்மான எல்இடி டிஆர்எல், கருப்பு நிற கிரில், புதிய எல்இடி ஹெட்லைட், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், கனெக்டெட் எல்இடி லைட்டுகள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், மார்டனான டச் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார் மொத்தம் 6 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. அதன்படி ஸ்மார்ட், ப்யூர், ப்யூர்பிளஸ், அட்வெஞ்சர், அக்கம்பிளீஷ், அக்கம்பிளீஷ் பிளஸ் எஸ், என வேரியன்ட்கள் பிரிக்கப்பட்டுள்ளது. கலர் ஆப்ஷன்களும் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதன்படி பெங்கால் ரோக், கேராமெல், கூர்க் கிளவுட்ஸ், சியாந்தாபிக், டேடோனா கிரே, பிரிஸ்டைன் ஒயிட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
இந்த காரில் ஏகப்பட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளது. இதில் 360 டிகிரி கேமரா, பிளைட் வியூ மானிட்டர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், பெரிய 10.24 இன்ச் எச்டி டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மென் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சஙகள் உள்ளன. இந்த காரில் பெட்ரோல் வேரியன்ட்டில் 366 லிட்டர் பூட் வசதியும், சிஎன்ஜி வெர்ஷனில் 210 லிட்டர் பூட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளது. முக்கியமாக இதில் 6 ஏர்பேக்குகள், இஎஸ்சி, ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஆகிய அம்சங்கள் உள்ளது. இந்த காரின் பாதுகாப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்றால் இந்த காரின் நேருக்கு நேர் 50 கி.மீ வேகத்தில் மோத வைத்தார்கள். அப்பொழுதும் காரில் உள்ள டம்மிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரின் தகதவுகள் திறக்கும் நிலையிலேயே இருந்தது.


Click it and Unblock the Notifications








