நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ... ரெண்டே 2 கார்கள் மூலம் மீண்டும் இழந்த இடத்தை பிடிக்கும் டாடா!
இந்தியாவில் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட SUV கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகை SUV கார்களை சப்-4 மீட்டர் SUV கார்கள் என அழைக்கின்றனர். இந்த வகை கார்களின் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறது என்றால், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 1.10 லட்சத்திற்கும் அதிகமான சப்-4மீ SUV கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் தற்சமயம் 14 விதமான சப்-4மீ SUV கார் மாடல்கள் பல்வேறு விதமான பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. ஹோண்டா, MG உள்ளிட்ட மிகவும் சில நிறுவனங்களை தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களில் இருந்தும் இந்த பிரிவில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை மொத்தமாக கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 161 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2025ஆம் ஆண்டின் இதே ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 28 ஆயிரத்து 496 யூனிட்கள் அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 81 ஆயிரத்து 665 சப்-4மீ SUV கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஆனால், 1 லட்சத்து 17 ஆயிரத்து 889 சப்-4மீ SUV கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த கடந்த 2026 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7 ஆயிரத்து 728 யூனிட் கார்கள் ஜூன் மாதத்தில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த மாதத்தில் இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்பட்ட சப்-4மீ SUV கார்களில் முதலிடத்தை டாடா பன்ச் பிடித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் 20 ஆயிரத்து 208 பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இன்னும் அதிகமாக 21 ஆயிரத்து 6 பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக பன்ச் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2025 ஜூன் மாதத்தில் இன்னும் குறைவாக 10 ஆயிரத்து 446 பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 2வது இடத்திலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சப்-4மீ SUV காராக நெக்ஸான் 18 ஆயிரத்து 335 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. கடந்த 2025 ஜூன் மாதத்தில் 11 ஆயிரத்து 602 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், கடந்த மே மாதத்தில் 19 ஆயிரத்து 100 நெக்ஸான் கார்களை டாடா விற்பனை செய்திருந்தது.
இந்த இரு டாடா கார்களுக்கு அடுத்து 3வது இடத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஃபிரான்க்ஸ் உள்ளது. கடந்த மே மாதத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, அந்த மாதத்தில் இந்தியாவிலேயே அதிக பேரால் வாங்கப்பட்ட காராக முதலிடம் பிடித்திருந்த ஃபிரான்க்ஸ் கடந்த மாதத்தில் 13 ஆயிரத்து 135 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் ஹூண்டாய் வென்யூ 10 ஆயிரத்து 776 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2025 ஜூனில் வெறும் 6 ஆயிரத்து 858 யூனிட் வென்யூ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மஹிந்திரா XUV 3XO, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்கள் உள்ளன. அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகளை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
| Sub-Compact SUVs (3.8 - 4 meter) | Jun-26 | Jun-25 | Diff | Growth % YoY |
| Tata Punch / EV | 21,006 | 10,446 | 10,560 | 101.09 |
| Tata Nexon / EV | 18,335 | 11,602 | 6,733 | 58.03 |
| Maruti Fronx | 13,135 | 9,815 | 3,320 | 33.83 |
| Hyundai Venue | 10,776 | 6,858 | 3,918 | 57.13 |
| Mahindra XUV3XO / EV | 10,063 | 7,089 | 2,974 | 41.95 |
| Maruti Brezza | 9,939 | 14,507 | -4,568 | -31.49 |
| Kia Sonet | 9,231 | 6,658 | 2,573 | 38.65 |
| Hyundai Exter | 8,154 | 5,873 | 2,281 | 38.84 |
| Skoda Kylaq | 4,039 | 3,196 | 843 | 26.38 |
| Toyota Taisor | 2,483 | 2,408 | 75 | 3.11 |
| Nissan Magnite | 1,167 | 1,313 | -146 | -11.12 |
| Kia Syros | 790 | 774 | 16 | 2.07 |
| Renault Kiger | 689 | 755 | -66 | -8.74 |
| Maruti Jimny | 354 | 371 | -17 | -4.58 |
| Total | 1,10,161 | 81,665 | 28,496 | 34.89 |
| Sub-Compact SUVs (3.8 - 4 meter) | Jun-26 | May-26 | Diff | Growth % MoM |
| Tata Punch / EV | 21,006 | 20,208 | 798 | 3.95 |
| Tata Nexon / EV | 18,335 | 19,100 | -765 | -4.01 |
| Maruti Fronx | 13,135 | 20,686 | -7,551 | -36.50 |
| Hyundai Venue | 10,776 | 11,714 | -938 | -8.01 |
| Mahindra XUV3XO / EV | 10,063 | 6,717 | 3,346 | 49.81 |
| Maruti Brezza | 9,939 | 13,425 | -3,486 | -25.97 |
| Kia Sonet | 9,231 | 9,707 | -476 | -4.90 |
| Hyundai Exter | 8,154 | 6,595 | 1,559 | 23.64 |
| Skoda Kylaq | 4,039 | 3,443 | 596 | 17.31 |
| Toyota Taisor | 2,483 | 2,496 | -13 | -0.52 |
| Nissan Magnite | 1,167 | 1,665 | -498 | -29.91 |
| Kia Syros | 790 | 961 | -171 | -17.79 |
| Renault Kiger | 689 | 656 | 33 | 5.03 |
| Maruti Jimny | 354 | 516 | -162 | -31.40 |
| Total | 1,10,161 | 1,17,889 | -7,728 | -6.56 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார்கள் மார்க்கெட்டில் இவ்வாறான 4 மீட்டர்களுக்கு குறைவான நீளம் கொண்ட SUV கார்கள் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்றால், இந்த லிஸ்ட்டில் முதல் இரு இடங்களை பிடித்த டாடா பன்ச் மற்றும் நெக்ஸான் கார்கள் தான் கடந்த மாதத்தில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட SUV கார் மாடல்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications