டாடா பன்ச் காருக்கு போட்டியா எந்த காரும் இல்ல! மாருதி கார் கூட 4வது இடத்தில்தான்!
இந்தியாவில் நிமிர்ந்த தோற்றம் கொண்ட SUV கார் மாடல்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், கடந்த 2026 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 SUV கார் மாடல்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இதில் வழக்கம்போல், டாடா SUV கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய சந்தையில் SUV கார்களை விற்பனை செய்வதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டாடா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் பன்ச் மற்றும் நெக்ஸான் கார் மாடல்கள் தொடர்ந்து விற்பனை உயர்வை கண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்திலும் இவற்றின் விற்பனை பாதிக்கு மேலாகவும், டபுள் மடங்காகவும் அதிகரித்துள்ளன.

கடந்த 2026 ஜூன் மாதத்தில் டாடா பன்ச் கார்கள் மொத்தம் 21 ஆயிரத்து 6 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 101% அதிகமாகும். அதாவது, பன்ச் கார்களின் விற்பனை அப்படியே டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 10 ஆயிரத்து 446 பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ள டாடா நெக்ஸான் கடந்த மாதத்தில் 18 ஆயிரத்து 335 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் விற்பனையும் 2025 ஜூன் மாதத்தில் விற்பனையானதில் பாதிக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 11 ஆயிரத்து 602 யூனிட் நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், நெக்ஸான் கார்களின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 58% அதிகரித்துள்ளது. இவற்றிற்கு அடுத்து மூன்றாவது இடத்திலும் மாருதி சுஸுகி கார் மாடல் இல்லாமல், மஹிந்திரா ஸ்கார்பியோ இடம்பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 14 ஆயிரத்து 97 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 11% அதிகமாகும். இதற்கடுத்து 4வது இடத்தில் தான் மாருதி சுஸுகியின் ஃபிரான்க்ஸ் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் 34% அதிகமாக 13,135 ஃபிரான்க்ஸ் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5வது இடத்தில் ஹூண்டாயின் பிரபலமான வென்யூ கார் உள்ளது.
| SUV Model | June 2026 | June 2025 | Diff |
| Tata Punch | 21,006 | 10,451 | 10,555 |
| Tata Nexon | 18,335 | 11,604 | 6,731 |
| Mahindra Scorpio | 14,097 | 12,699 | 1,398 |
| Maruti Suzuki Fronx | 13,135 | 9,802 | 3,333 |
| Hyundai Venue | 10,776 | 6,864 | 3,912 |
| Mahindra Thar | 10,669 | 9,526 | 1,143 |
| Mahindra XUV 3XO | 10,063 | 7,087 | 2,976 |
| Maruti Suzuki Victoris | 10,035 | — | — |
| Maruti Suzuki Brezza | 9,939 | 14,404 | -4,465 |
| Kia (Combined Range) | 9,654 | 5,218 | 4,436 |
| Total Top 10 SUVs | 1,27,709 | 87,655 | 40,054 |
கடந்த மாதத்தில் 10 ஆயிரத்து 776 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இது 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 57% அதிகமாகும். இதற்கடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் மஹிந்திராவின் தார் மற்றும் XUV 3XO கார் மாடல்கள் முறையே 10,669 மற்றும் 10,063 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.
இவற்றின் விற்பனை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் முறையே 12% மற்றும் 42% அதிகரித்துள்ளன. 8வது மற்றும் 9வது இடங்களில் மீண்டும் மாருதி சுஸுகி கார்களாக விக்டோரிஸ் மற்றும் பிரெஸ்ஸா முறையே 10,035 மற்றும் 9,939 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. கடைசி 10வது இடத்தில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் 9,654 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்கள் கடந்த 2026 ஜூன் மாதத்தில் மீண்டும் ஒருமுறை ஆதிக்கம் செலுத்தி உள்ளன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் SUV கார் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி, நாட்டின் முதன்மையான கார் நிறுவனமாக உயர்ந்து வருகிறது. அதேபோன்று, மஹிந்திரா நிறுவனமும் இந்த டாப்-10 லிஸ்ட்டில் மூன்று இடங்களில் உள்ளது.


Click it and Unblock the Notifications