5 லட்ச ரூபாயில் டாடா கார் என்றதும் லட்சக் கணக்கான மக்கள் வாங்கி போட்டுட்டாங்க! சைஸும் முக்கிய காரணம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் புகழ்மிக்க கார்கள் வரிசையில், நெக்ஸான் (Nexon) காருக்கு அடுத்து பன்ச் (Punch) ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இதன் விற்பனை எண்ணிக்கையே இதற்குச் சான்றாக உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், டாடா பன்ச் 7 லட்சம் யூனிட்டுகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.
இந்தியாவில் மிக விரைவாக 7 லட்சம் யூனிட் விற்பனை மைல்கல்லை எட்டிய கார் எனும் பெருமையைப் பன்ச் பெற்றுள்ளது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 2025 ஜனவரியில் 5 லட்சம் யூனிட் விற்பனை இலக்கை அடைந்த பன்ச், கடந்த 12 மாதங்களில் மேலும் 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் 19 ஆயிரம் பன்ச் கார்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரியில் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (முகப்பு மாற்றம்) அறிமுகப்படுத்தப்பட்டது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரான பன்ச், தொழிற்நுட்ப அம்சங்களிலும் தோற்றத்திலும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆரம்ப விலை ரூ.5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
புதிய பன்ச் எஸ்யூவி காரில் செங்குத்தான டிசைனில் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்-கள், கருப்பு நிற முன் & பின்பக்க பம்பர்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட் போன்ற ஹைலைட்கள் இந்த காரின் வடிவமைப்பில் உள்ளன. 16-இன்ச் டூயல்-டோன் அலாய் சக்கரங்கள் மற்றும் புதிய கனெக்டட் எல்இடி டெயில் லைட்டுகள் உடன் காரின் முன்பக்கத்தில், என்ஜினுக்கு காற்று செல்லும் துளைகளைச் சுற்றி சில்வர் நிறம் இந்த காரில் இடம்பெறுகிறது.

டேடோனா கிரே, பெங்கால் ரூஜ், கூர்க் கிளவுட்ஸ், ப்ரிஸ்டின் ஒயிட், கார்மல் மற்றும் சயன்டஃபிக் என ஆறு கலர் ஆப்ஷன்களில் பன்ச் கிடைக்கிறது. பன்ச் காரில் முதலில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடிற்கு பிறகு வாடிக்கையாளர்கள் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனையும் பெற முடிகிறது.
அதிகப்பட்சமாக 87 பிஎச்பி பவரையும், 115 என்.எம் டார்க் திறனையும் வழங்கும் நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜினை பன்ச் காரில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் உடன் பெறலாம். டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி பவரையும், 170 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது.

சிஎன்ஜி (CNG) ஆப்ஷனிலும் டாடா பன்ச் கிடைக்கிறது. நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் உடன் கிடைக்கும் சிஎன்ஜி பதிப்பு ஆனது அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 103 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியதாக உள்ளது. நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் போன்றே பன்ச் சிஎன்ஜி காரிலும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், பன்ச் ஆனது எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி உடன் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகவும் கிடைக்கிறது. பன்ச்சின் முக்கிய அம்சங்களைப் பொறுத்தவரை, அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், பல்வேறு டிரைவ் மோட்கள், கீலெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங், 4-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. பார்க்கிங் சென்சார்கள், ஸ்மார்ட் ஸ்டீயரிங் சக்கரம், ஃபிரண்ட் பவர் விண்டோஸ் ஆகியவையும் இதில் அடங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பன்ச் உடன், டாடா நெக்ஸான் காரும் கடந்த 2026 ஜனவரி மாதத்தில் 23,000 யூனிட்டுகளுக்கும் அதிகமான விற்பனையுடன் வலுவான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. நெக்ஸானின் மொத்த விற்பனை 10 லட்சம் யூனிட்டுகளைத் தாண்டியுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன விற்பனைக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.


Click it and Unblock the Notifications









