26கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் 5-சீட்டர் டாடா கார்... வாங்குவதற்கு நான், நீ என்று போட்டி!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான மற்றும் அளவில் சிறியதான எஸ்யூவி காராக பன்ச் விளங்குகிறது. மற்ற மாருதி சுஸுகி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் பன்ச் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாருதி சுஸுகிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கு பன்ச் காரின் பங்களிப்பு முக்கியமானது.
நடந்து முடிந்த கடந்த 2026 மே மாதத்தில் மொத்தம் 20 ஆயிரத்து 208 பன்ச் கார்களை இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மே மாதத்தில் வெறும் 13 ஆயிரத்து 133 பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், பன்ச் கார்களின் விற்பனை ஆனது 2025 மே மாதத்தை காட்டிலும் நடப்பாண்டு மே மாதத்தில் 54% அதிகரித்துள்ளது. கடந்த 2026 ஏப்ரல் மாதத்திலும் 19 ஆயிரத்து 107 பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் ஆயிரத்து 101 பன்ச் கார்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளன.
கடந்த மே மாதத்தில் நான்கு கார் மாடல்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் டாடா பன்ச் காரும் ஒன்றாகும். மீதி மூன்று கார் மாடல்களும் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். டிசையர், ஃபிரான்க்ஸ் மற்றும் எர்டிகா என்கிற அந்த மூன்று மாருதி சுஸுகி கார் மாடல்கள் தான் கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான முதல் மூன்று கார்களாக உள்ளன.

அவற்றிற்கு அடுத்து 4வது இடத்தை டாடா பன்ச் பிடித்துள்ளது. பன்ச் காருக்கு விற்பனையில் போட்டியளிக்கும் கார் மாடல் என்றால் அது ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் ஆகும். ஆனால், கடந்த மே மாதத்தில் அதிக பேரால் வாங்கப்பட்ட கார்கள் லிஸ்ட்டில் முதல் 25 இடங்களில் எக்ஸ்டர் இடம்பெறவில்லை.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மைக்ரோ-எஸ்யூவி வகை காரான பன்ச் மொத்தம் 8 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.59 லட்சத்தில் இருந்து ரூ.8.99 லட்சம் வரையில் உள்ளன. பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே இந்த டாடா கார் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் என்ஜின் ஆப்ஷன் இல்லை.
இருப்பினும், பன்ச் CNG கார் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் ஐடர்போ பெட்ரோல் என்ஜின் என இரு விதமான பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் தான் பன்ச் CNG காரில் வழங்கப்படுகிறது.
பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற டாடா பன்ச் காரில் தரையில் இருந்து அடிப்பகுதி ஆனது எளிதில் பாதிப்படையாத வகையில் நன்கு உயரமாக 193மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. கதவுகள் மொத்தமாக 90 டிகிரி அளவிற்கு திறக்கக் கூடியவைகளாக உள்ளன. பன்ச் CNG காரில் வழங்கப்படும் ட்வின்-சிலிண்டர் iCNG தொழிற்நுட்பம் ஆனது காரின் பின்பக்கத்தில் அதிக பூட்ஸ்பேஸை வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு இத்தனை அம்சங்கள் வழங்கப்படுவதினால் தான் டாடா பன்ச் கார்கள் ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கில் விற்பனையாகுகின்றன. டாடா கார்கள் வரிசையில் நெக்ஸானுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பன்ச் தற்போது நெக்ஸானை விடவும் அதிகமாக விற்பனையாகி வருவது அதன் வளர்ச்சியை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
