பாரத் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்திய டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார்!

பாரத் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்பு தரத்தை மதிப்பிடும் மோதல் சோதனையில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தி உள்ளது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் இந்த பாதுகாப்பு தர மதிப்பீடு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் என்சிஏபி அமைப்பு நடத்திய சோதனையில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் அதிகபட்சமான 32 புள்ளிகளுக்கு 31.09 புள்ளிகளை பெற்றுள்ளது. முன்புறம் மற்றும் பக்கவாட்டு மோதல் சோதனைகளை நடத்தி இந்த பாதுகாப்பு தரம் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில், இரண்டு சோதனைகளிலும் பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பை இந்த எலெக்ட்ரிக் மாடல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tata Punch EV

இதேபோன்று, சிறார்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பீட்டிலும் சிறந்த மதிப்பீட்டை பெற்றுள்ளது. அதாவது, அதிகபட்சமான 49 புள்ளிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் 45 புள்ளிகளை பெற்று அசத்தி உள்ளது. சிறார்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை பொருத்தும் வசதி மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களை வைத்து இந்த மதிப்பீடு செய்யப்பட்டது.

பாரத் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்பு தர மதிப்பீட்டு மோதல் சோதனையில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் அட்வென்ச்சர் 40, எம்பவர்டு ப்ளஸ் எஸ்40 மற்றும் 40kWh பேட்டரி பொருத்தப்பட்ட அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் இந்த மதிப்பீடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சிறார் இருக்கை பொருத்தும் அமைப்பு மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கார்களை தயாரித்து வருகிறது. இதன் காரணமாக, பாதுகாப்பு தர மதிப்பீட்டு மோதல் சோதனைகளில் அந்நிறுவனத்தின் கார்கள் அதிகபட்ச நட்சத்திர மதிப்பீட்டை பெற்று வருகின்றன. மேலும், நெக்ஸான், கர்வ் மற்றும் ஹாரியர் எலெக்ட்ரிக் மாடல்களும் பாரத் என்சிஏபி நடத்திய மோதல் சோதனைகளில் அதிகபட்ச நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளன. அந் வரிசையில், தற்போது டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரும் அதிகபட்ச மதிப்பீட்டை பெற்றுள்ளது.

எலெக்ட்ரிக் கார்கள் தற்போது வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் தவிர்த்து பாதுகாப்பு அம்சங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். எனவே, இந்த மோதல் சோதனை முடிவுகள் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனையிலும், வாடிக்கையாளர் தேர்விலும் முக்கிய இடம் பிடிக்கும் என்று கூற முடியும். டாடா பன்ச் எளெக்ட்ரிக் கார் மைக்ரோ எஸ்யூவி என்ற சிறிய ரக எஸ்யூவி கார் பிரிவில் சிட்ரோன் சி3 இவி காருடன் நேரடியாக போட்டி போடுகிறது. தற்போது கிடைத்துள்ள பாதுகாப்பு மதிப்பீட்டு சான்று டாடா பன்ச் காருக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக உள்ளது.

Article Published On: Wednesday, July 29, 2026, 15:45 [IST]
English summary
Tata punch ev 5 star bharat ncap crash test rating
மேலும்... #tata motors #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out