வெறும் 100 ரூபால சென்னை-மதுரை போயிரலாம்! இந்தியாவையே மிரள விட்ட புதிய கார்! இந்த மாச கடைசில டெலிவரி தொடங்குது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch EV Facelift), கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதை தொடர்ந்து டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் நடப்பு பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளன. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tata Punch EV Facelift Interior

டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. இதில், 30 kWh பேட்டரி ஒன்றாகும். இதன் டிரைவிங் ரேஞ்ச் 365 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மற்றொரு பேட்டரி ஆப்ஷன் 40 kWh ஆகும்.

இதன் டிரைவிங் ரேஞ்ச் 468 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பேட்டரியை, 20 சதவீத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

Tata Punch EV Facelift

டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 3 டிரைவிங் மோட்கள் (ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்) மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளையும் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார், பாரத் என்சிஏபி (Bharat-NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Tests)முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Ratings) பெற்றுள்ளது.

இந்த சூழலில், அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 9.69 லட்ச ரூபாய் மட்டுமே ஆகும். இதுவே பாஸ் (BAAS - Battery As A Service) முறையில், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை நீங்கள் வாங்கினால், அதன் ஆரம்ப விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் இந்த முறையை தேர்வு செய்தால், நீங்கள் இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், 2.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு சுமாராக வெறும் 1.25 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். அப்படியானால் சென்னையில் இருந்து மதுரை வருவதற்கு (சுமார் 450 கிலோ மீட்டர்கள்), சுமாராக வெறும் 562 ரூபாய் மட்டுமே செலவு ஆகும்.

இது 5 சீட்டர் கார் என்பதால், ஒருவருக்கான தொகையை கணக்கிட்டால், சுமாராக 112 ரூபாய் மட்டுமே வரும். எனவே இயக்குவதற்கு மிகவும் குறைவான செலவு மட்டுமே ஆக கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, February 23, 2026, 17:52 [IST]
English summary
Tata punch ev facelift delivery from february end check all details here
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+