20ம் தேதி சம்பவம் உறுதி! குறைவான விலையில் டாடா களமிறக்க போகும் புதிய எலெக்ட்ரிக் கார்! மார்க்கெட் அதிர போகுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் டாடா பன்ச் கார் கிடைத்து வருகிறது. இதில், ஐசி இன்ஜின் வெர்ஷனின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch EV Facelift), வரும் பிப்ரவரி 20ம் தேதி (February 20) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டு வருகின்றன. அவை 25 kWh மற்றும் 35 kWh ஆகியவை ஆகும். இவற்றுடன் கூடுதலாக ஒரு புதிய பேட்டரி ஆப்ஷனும், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக அது 40.5 kWh பேட்டரி ஆப்ஷனாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 400-500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், சப் வூஃபர் உடன் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகளையும் எல்லாம் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பையும் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.44 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படும் காரணத்தால், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை சற்று உயர்த்தப்பட்டாலும் கூட, இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என்ற பெருமையை டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








