சிங்கிள் சார்ஜில் 600 கிமீ ஓடும் கார் வெறும் 6 லட்சத்திற்கு அறிமுகம்! மாருதி பொழப்பு சிரிப்பா சிரிக்க போகுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இன்று (பிப்ரவரி 20) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 30 kWh மற்றும் 40 kWh ஆகியவை ஆகும். இதில், 30 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (driving range) 365 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 40 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 468 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இவை அனைத்துமே அராய் அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் (ARAI) ஆகும். ஆனால் நடைமுறை பயன்பாட்டில், இதை விட அதிக ரேஞ்ச் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல், சமீபத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஒரே ஒரு முறை மட்டும் செய்யப்பட்ட சார்ஜ் மூலம் சுமார் 600 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. அந்த சமயத்தில் கார் பெரும்பாலான நேரம், தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்பட்டது.
எனவே சாலையின் கண்டிஷன், ஓட்டும் விதம் ஆகியவற்றை பொறுத்து, ரேஞ்ச் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 65 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பேட்டரியை, வெறும் 26 நிமிடங்களிலேயே, 20 சதவீத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.
டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 9.69 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டை பாஸ் (BAAS - Battery As A Service) முறையில் வாங்கினால், விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் இந்த முறையை நீங்கள் தேர்வு செய்தால், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட் விலையும் கூட வெறும் 12.59 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்டின் பாஸ் விலை எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 9.99 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் அதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 14.44 லட்ச ரூபாயாக இருக்கிறது. எனவே பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களும், ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்றால், விலையை உயர்த்தவே செய்யும். ஆனால் அதற்கு மாறாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இதன்படி ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 30 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 1.85 லட்ச ரூபாய் குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் காரானது, ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், கடந்த ஜனவரி மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் தற்போது டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே வரும் மாதங்களில், இந்திய சந்தையில் டாடா பன்ச் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருத்து. டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
இதில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 15.99 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை பாஸ் முறையில் வாங்கினால், விலை 10.99 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாயை செலுத்த வேண்டும்.
மறுபக்கம் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை நீங்கள் பாஸ் முறையில் வாங்கினால், அதன் விலை 9.99 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் நீங்கள் 3.90 ரூபாயை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி இ விட்டாரா மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் மாற்றாக, மிகவும் குறைவான விலையில், வேறு ஒரு எலெக்ட்ரிக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








