ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 25 பைசா மட்டுமே செலவு! போட்டி நிறுவனங்களை மிரள வைத்த டாடாவின் புது கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch EV Facelift) மாடல், இன்று (பிப்ரவரி 20) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக நிகழ்ச்சிக்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், யூடியூப் (YouTube) பக்கத்தில் புதிய வீடியோ (Video) ஒன்றை வெளியிட்டது.

இது டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ப்ரோமோ வீடியோ (Promo Video) ஆகும். டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை இயக்க ஒரு கிலோ மீட்டருக்கு எவ்வளவு செலவு ஆகும்?, அதாவது ரன்னிங் காஸ்ட் (Running Cost) எவ்வளவு? என்பது இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 Tata Punch EV

இந்த வீடியோவில், டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய பகுதியை சேர்ந்த மனோஜ் ஷர்மா என்பவர், தனது குடும்பத்துடன், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ஹிமாச்சல பிரதேச (Himachal Pradesh) மாநிலம் சிம்லாவிற்கு (Shimla) அருகே உள்ள நார்கண்டா (Narkanda) என்ற பகுதிக்கு செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

மனோஜ் ஷர்மா தனது குடும்பத்துடன் அடிக்கடி பெட்ரோல் (Petrol) காரில், தொலை தூர பயணங்களை மேற்கொள்ள கூடியவர். ஆனால் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரானது, பேட்டரி மூலம் இயங்க கூடிய எலெக்ட்ரிக் கார் என்பதால், ஆரம்பத்தில் அவருக்கு தயக்கம் இருந்தது. டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) எவ்வளவு கிடைக்கும், சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் ஆகும்? (Charging Time) என்பது போன்ற தயக்கங்கள் அவருக்கு இருந்தன.

Tata Punch EV Facelift

மனோஜ் ஷர்மா பயணத்தை தொடங்கியபோது, டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 99 சதவீத சார்ஜ் இருந்தது. அப்போது 390 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என கார் காட்டியது. பின்னர் ஹரியானா மாநிலம் முர்த்தல் என்ற பகுதிக்கு வந்தபோது, 74 சதவீத சார்ஜ் இருந்தது. அப்போது 294 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என கார் காட்டியது.

அப்போது மனோஜ் ஷர்மா காரை நிறுத்தி, பேட்டரியை சார்ஜ் செய்தார். அந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் உணவு சாப்பிட்டு முடித்து விட்டனர். இடைப்பட்ட நேரத்தில் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் வேகமாக சார்ஜ் ஆகி விட்டது. அவர்கள் மீண்டும் காரை எடுத்தபோது, 97 சதவீத சார்ஜ் இருந்தது.

இறுதியில் 12 சதவீத சார்ஜ் மீதம் இருந்த நிலையிலேயே, அவர்கள் நார்கண்டாவை அடைந்து விட்டனர். இது சுமார் 436 கிலோ மீட்டர் பயணம் ஆகும். இந்த 436 கிலோ மீட்டர் பயணத்திற்கு, பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக வெறும் 550 ரூபாயை மட்டுமே செலவு செய்ததாக மனோஜ் ஷர்மா கூறியுள்ளார்.

அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 1.26 ரூபாய் மட்டுமே செலவு ஆகியுள்ளது. இதுவே பெட்ரோல் காராக இருந்திருந்தால், இந்த தொலைவை கடப்பதற்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் செலவு ஆகியிருக்கும் என மனோஜ் ஷர்மா தெரிவித்துள்ளார். அதாவது பெட்ரோல் காராக இருந்திருந்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 6.88 ரூபாய் செலவு ஆகியிருக்கும்.

பெட்ரோல் கார் உடன் ஒப்பிடும்போது, டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை இயக்குவதற்கு மிகவும் குறைவாகவே செலவு ஆகும் என இந்த வீடியோவின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்து கூறியுள்ளது. இத்தனைக்கும் இந்த பயணம் ஒரே சீராக இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்லாது, வளைவுகள் மிகுந்த மலை பாதைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த பயணத்தை மேற்கொண்ட மனோஜ் ஷர்மா, டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ரன்னிங் காஸ்ட் மட்டுமல்லாது, டிரைவிங் ரேஞ்ச், விரைவாக சார்ஜ் ஆகும் திறன் மற்றும் 'ஸ்மூத்' ஆன செயல்திறன் போன்ற அம்சங்களையும் வெகுவாக பாராட்டியுள்ளார். குறிப்பாக மலை பாதைகளில் காரை ஓட்டியது மிகவும் எளிமையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 'ஆக்ஸலரேஷன்' சிறப்பாக இருந்த காரணத்தால், நம்பிக்கையுடன் ஓவர்டேக் செய்ய முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல், 5 சீட்டர் கார் ஆகும். தற்போது வெளியாகியுள்ள வீடியோவின்படி பார்த்தால், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1.26 ரூபாய் மட்டுமே செலவாகிறது. அப்படியானால் 5 பேர் பயணம் செய்யும்போது, ஒருவருக்கு ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்வதற்கான செலவு தோராயமாக 25 பைசா மட்டுமே ஆகும்.

எனவே இயக்குவதற்கு குறைவான செலவு மட்டுமே ஆக கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டாடா பன்ச் இவி மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இத்தனைக்கும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் விலையும் கூட மிகவும் குறைவுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 9.69 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 12.59 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இது விலை குறைவான காராக இருந்தாலும் கூட, தலா 10.25 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6 ஏர்பேக்குகள், சன்ரூஃப் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு, வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதற்கு 65 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்த வேண்டும்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார், மிகவும் விலை குறைவான, அதே நேரத்தில் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 20, 2026, 15:52 [IST]
English summary
Tata punch ev facelift running cost rs 1 26 per km video
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+