போட்டி நிறுவனங்களுக்கு வயித்துல புளியை கரைச்சிருக்கும்! விலை குறைவான எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது டாடா!

இந்திய சந்தையில் கிடைத்து வரும் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற, அதே நேரத்தில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வரும் பிப்ரவரி 20ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், 2026 டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் பக்க புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதை தவிர, 2026 டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய வேறு எந்த தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

Tata Punch EV Facelift

இருப்பினும் 2026 டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய ஒரு சில உறுதி செய்யப்படாத தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இதில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என்ற தகவலும் ஒன்றாகும். அத்துடன் 2026 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி கொண்டுள்ளது.

இவை இரண்டுமே தற்போது விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதேபோல் புதியதாக 40.5 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 400-500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tata Nexon EV

மற்றபடி தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே கூல்டு க்ளவ் பாக்ஸ், சுறா துடுப்பு ஆன்டெனா, 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு மற்றும் டெசண்ட் கண்ட்ரோல்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் (Features) அனைத்தையும் 2026 டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் அப்படியே எதிர்பார்க்கலாம்.

அத்துடன் 26.03 செமீ டிஜிட்டல் காக்பிட், ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் டிஸ்ப்ளே உடன் ஏர் ப்யூரிஃபையர், முன் பகுதியில் வென்டிலேஷன் அம்சத்துடன் கூடிய இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளையும், 2026 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நம்மால் எதிர்பார்க்க முடியும்.

செயல்திறனை பொறுத்தவரையில் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 25 kWh மற்றும் 35 kWh பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) அப்படியே 2026 டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் தற்போதைய நிலையில் முறையே 265 மற்றும் 365 கிலோ மீட்டர்களாக உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் இவி முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. அதில் லெவல் 2 அடாஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டால், பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

தற்போதைய நிலையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 9.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. மறுபக்கம் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 14.44 லட்ச ரூபாயாகமட்டுமே உள்ளது. இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் புதிய வசதிகள், புதிய டிசைன் உள்ளிட்ட அப்டேட்கள் காரணமாக, டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று உயர்த்தப்படலாம். ஆனால் இந்த விலை உயர்வு சிறிய அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என்ற பெருமையை 2026 டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் என நாங்கள் கருதுகிறோம்.

இந்திய சந்தையில் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV), எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், 2026 டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 8, 2026, 17:26 [IST]
English summary
Tata punch ev facelift unveiled expected driving range features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+