டாடா நானோ போல் அடிமாட்டு விலையில் களமிறங்கிய காரின் டெலிவரி தொடக்கம்! இனி பைக்லாம் வித்த மாதிரிதான்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift), கடந்த ஜனவரி 13ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் டெலிவரி (Delivery) பணிகள் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போதும் போதும் எனும் அளவிற்கு டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ஏராளமான அதிநவீன வசதிகளை (Features) வாரி வழங்கியுள்ளது.

Tata Punch Facelift Delivery

இதில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கீலெஸ் எண்ட்ரி மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது.

Tata Punch

பொதுவாக பாதுகாப்பு விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை நம்மால் எப்போதுமே குறை கூற முடியாது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களில் அந்த அளவிற்கு ஏராளமான பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வாரி வழங்கப்பட்டிருக்கும். இதற்கு டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விதிவிலக்கு அல்ல.

ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், பின் பகுதியில் டிஃபாகர் மற்றும் கார்னரிங் ஃபங்ஷன் உடன் பனி விளக்குகள் போன்றவை எல்லாம் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிக முக்கியமான பாதுகாப்பு வசதிகள் ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், பெட்ரோல் மற்றும் பெட்ரோல்+சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் இந்திய சந்தையில் சிஎன்ஜி இன்ஜின் உடன் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷனை பெற்றுள்ள முதல் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் சொந்தமாக்கியுள்ளது. மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.59 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகிய கார்களுக்கு அடுத்தபடியாக டாடா பன்ச் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. தற்போது டெலிவரி பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் டாடா பன்ச் இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 3, 2026, 15:51 [IST]
English summary
Tata punch facelift delivery begins in india price safety features engine options
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+