தம்பி கேட்ட மூட்றா! நானோ போல் அடிமாட்டு விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா! மாருதி கதை முடிஞ்சுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த டாடா பன்ச் கார், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சூழலில், பன்ச் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் ஜனவரி 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அன்றைய தினம்தான், புதிய டாடா சியரா (Tata Sierra) காரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் வரும் ஜனவரி 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட போவதில்லை. மாறாக அதற்கு முன்னதாக வரும் ஜனவரி 13ம் தேதியே (January 13) டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.
டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புதிய டீசர் வீடியோவை (Teaser Video), டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த டீசர் வீடியோ மூலமாகவே, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி (Launch Date) தற்போது நமக்கு உறுதியாக தெரிய வந்துள்ளது.

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனை (Design) பொறுத்தவரையில், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய பனி விளக்குகள், புதிய க்ரில் அமைப்பு, ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் பக்க பம்பர், பின் பகுதியில் கனெக்டட் டெயில்லேம்ப்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற போவது உறுதி.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், பெரிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புதிய ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம். டாடா பன்ச் கார் ஏற்கனவே மிகவும் பாதுகாப்பான ஒன்றாகதான் இருந்து வருகிறது.
இது குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனையில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்ற கார் ஆகும். இருப்பினும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்ப வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்திய கார்களில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் ஒரு பாதுகாப்பு வசதி (Safety Feature) ஆகும். ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மாற்றங்கள் எதுவும் இருக்காது என தகவலகள் தெரிவிக்கின்றன. அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும்.
இதில், பெட்ரோல் இன்ஜின் உடன், தற்போதைய மாடலில் வழங்கப்படுவதை போலவே, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும். ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் தற்போது மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும்தான் கொடுக்கப்படுகிறது.
எனினும் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், சிஎன்ஜி இன்ஜின் உடனும், ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில், இந்திய சந்தையில் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் கிடைக்கும் ஒரு சில சிஎன்ஜி கார்களின் பட்டியலில், டாடா பன்ச் சிஎன்ஜி காரும் இணையும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை (Price) வெறும் 5.75 ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) உள்ளிட்ட கார்களுக்கு எல்லாம், டாடா பன்ச் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். பொங்கல் (Pongal) பண்டிகைக்கு ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








