அடிமாட்டு விலையில் புது காரை களமிறக்கும் டாடா! மாருதியை ஒழிச்சு கட்டியே ஆகணும்னு முடிவோட இருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மிகவும் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift), வரும் ஜனவரி 15ம் தேதி (January 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tata Punch Interior Design

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான டிசைன் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதேபோல் தற்போது இருப்பதை காட்டிலும் அளவில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளும் (Features), டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படும் என நாம் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற பல்வேறு வசதிகளும், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tata Punch

ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 87 பிஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும். சிஎன்ஜி வேரியண்ட்களிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால் அதன் பவர் அவுட்புட் 72 பிஹெச்பி பவர் மற்றும் 103 என்எம் டார்க் திறன் ஆக இருக்கும். தற்போதைய நிலையில் சிஎன்ஜி இன்ஜின் உடன், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.75-6 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவும் மிகவும் குறைவான விலைதான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, அதன் நேரடி போட்டி மாடலான ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கு, விற்பனையில் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். அத்துடன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காருக்கும், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை நெருக்கடியாக அமையலாம். வரும் பொங்கல் (Pongal) பண்டிகைக்கு புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

முன்னதாக டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனவரி 15ம் தேதிதான், புதிய டாடா சியரா (Tata Sierra) காரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்படவுள்ளன. இது மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்களுக்கு விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 2, 2026, 17:38 [IST]
English summary
Tata punch facelift launch date january 15 check all details here
மேலும்... #tata motors #Pongal 2026 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+