டாடா நானோ மாதிரி குறைவான விலை! இந்தியாவே எதிர்பார்த்த கார் களமிறங்கியது! மாருதி தலையில் இடியை இறக்கீட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இன்று (ஜனவரி 13) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல், அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், கார்னரிங் ஃபங்ஷன் உடன் எல்இடி பனி விளக்குகள் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஏர் ப்யூரிஃபையர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிரைவ் மோடுகள், 6 ஏர்பேக்குகள் மற்றும் டைப் சி சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளையும் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது.
டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் புதிய எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் ஹெட்லேம்ப்கள், கனெக்டட் எல்இடி லைட் பார் உடன் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகிய அம்சங்களையும், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options) டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளது. அவை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி ஆகிய இன்ஜின்கள் ஆகும்.
இதில், டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 118 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறன் ஆக உள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இன்ஜின் 87 பிஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் உடனும், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.59 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 10.54 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே 7 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் டாடா பன்ச் காரை வாங்கி விட்டனர்.
இந்த சூழலில்தான் தற்போது டாடா பன்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக டாடா பன்ச் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் எனவும் நாங்கள் கருதுகிறோம். அத்துடன் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனையான கார் என்ற பெருமையை டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் குறைவான விலையில் ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என திட்டமிட்டு கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








