ரூ.6.50 லட்சத்தில் கிடைக்கும் புதிய டாடா கார் பார்க்க இப்படித்தான் இருக்குமா? நெருக்கமா பார்த்தா தான் தெரியுது

புதிய டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift) கார் இன்று (ஜன.13) அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த காரின் விலை குறைவான 'பியூர்' வேரியண்டின் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளன. புதுப்பிக்கப்பட்ட பன்ச் கார்கள் வரிசையில், எண்ட்ரி-லெவல் 'ஸ்மார்ட்' (Smart) வேரியண்ட்டிற்கு அடுத்தபடியாக பியூர் வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

டீலர் மையங்களில் இருந்து ரகசியமாக பெறப்பட்ட இந்த படங்கள், புதுப்பொலிவுடன் வந்துள்ள பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்த 'பியூர்' வேரியண்டில் இருந்து வாடிக்கையாளர்கள் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த படங்கள் 'ஆட்டோ ஜென்' (Auto Zen) என்கிற ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தின் மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ளன.

tata punch facelift pure variant

பியூர் வேரியண்ட் ஆனது 'பன்ச் இவி' (Punch EV) எலெக்ட்ரிக் காருக்கு இணையாக புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் வந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது. இந்த பன்ச் பியூர் காரின் முன்பக்கத்தில், இரண்டாக பிளவுப்பட்ட டிசைனில் புதிய ஹெட்லேம்ப் அமைப்பு காணப்படுகிறது; இதில் மெல்லிய எல்இடி விளக்குகள் மேலே பொருத்தப்பட்டிருக்க, பிரதான ஹெட்லேம்ப்கள் பம்பரின் கீழ் பகுதியில் அமைந்துள்ளன.

காரின் ஒட்டுமொத்த தோற்றம் நிமிர்ந்த மற்றும் கச்சிதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வீல் ஆர்ச்சுகள் மற்றும் பம்பர்களைச் சுற்றியுள்ள தடிமனான க்ளாடிங் ஆனது எஸ்யூவி கார்களுக்கே உண்டான கவர்ச்சியை வலுப்படுத்துகிறது. முழு வீல் கவர்களுடன் கூடிய ஸ்டீல் சக்கரங்கள் இந்த வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ளன. இது அலாய் சக்கரங்கள் உயர் வேரியண்ட்களுக்கு மட்டுமே என்பதைக் குறிக்கிறது.

tata punch facelift pure variant

காரின் பின்புறத்தில், பன்ச் ஃபேஸ்லிஃப்ட் பியூர் வேரியண்ட் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மற்றும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட டெயில்-லேம்ப் அமைப்பையும், டிசைன் மாற்றப்பட்ட பம்பர் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இவை முந்தைய பன்ச் காரை விட எளிமையானதாகவும், மாடர்ன் தோற்றத்திலும் காணப்படுகிறது. உட்புறத்தில், பியூர் வேரியண்ட்டின் கேபின் அன்றாட நடைமுறைக்கு உகந்ததாகவும், அதன் விலைக்கு ஏற்ற அம்சங்களுடனும் சிறப்பாகக் காட்சியளிக்கிறது.

டாடா மோட்டார்ஸ் முன்னதாகத் தெரிவித்தப்படி, இந்த பியூர் வேரியண்ட் ஆனது அடிப்படை ஸ்மார்ட் வேரியண்ட்டை விடப் பல வசதி அம்சங்களைச் கொண்டுள்ளது. இதில் பின்புற ஏசி வென்ட்கள், ஸ்டியரிங் சக்கரத்தில் பொருத்தப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட், பின்பக்க விண்ட்ஷீல்டில் பனி படிவதை தடுக்கும் வசதி மற்றும் பகல்/இரவு உட்புற ரியர் வியூ மிரர் ஆகியவை அடங்கும்.

tata punch facelift pure variant

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள படங்கள், காரினுள் பரிட்சையமான டாஷ்போர்டு அமைப்பைக் காட்டுகின்றன. முக்கியமாக, பியூர் போன்ற விலை குறைவான வேரியண்ட்களிலும் கூட பாதுகாப்பு ஒரு முக்கிய அம்சமாகத் தொடர்கிறது. பியூர் வேரியண்ட், பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் அறிவிக்கப்பட்ட அனைத்து முக்கிய பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

இதில் ஆறு ஏர்பேக்குகள், இஎஸ்பி (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்குகின்றன. சிட்டி (City) மற்றும் ஈக்கோ (Eco) போன்ற டிரைவ் மோட்கள் அடிப்படை வேரியண்ட்டில் இருந்தே தொடர்கின்றன. இது நகர்ப்புறங்களில் டிரைவிங் திறனையும், எளிமையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

tata punch facelift pure variant

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் பியூர் போன்ற விலை குறைவான வேரியண்ட்கள் பாதுகாப்பான, நடைமுறைக்கு உகந்த மற்றும் மதிப்புமிக்க காம்பாக்ட் எஸ்யூவி காரைத் தேடுபவர்களை ஈர்க்கும். குறிப்பாக, காரின் முன்பகுதி நவீன மற்றும் வலுவான தோற்றத்தை அளிக்கிறது. அதேபோல், உட்புற டாஷ்போர்டு வழக்கமான டிசைனில் இருப்பது உறுதியான மற்றும் பயன்படுத்த எளிதான வடிவமைப்பிற்கு டாடா முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 13, 2026, 22:33 [IST]
English summary
Tata punch facelift pure variant spotted at dealership showroom yard check all details here
மேலும்... #tata motors #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X