நானோ போல் விலை குறைவான காரில் அதிநவீன அடாஸ் வசதியா! இந்தியாவையே மிரள விட போகும் டாடா மோட்டார்ஸ்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை வெறும் 5.59 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு புதிய வசதிகள் (Features) கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் டிசைனிலும் (Design) நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வசதி வழங்கப்படவில்லை.

அது அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) ஆகும். இது பல்வேறு பாதுகாப்பு வசதிகளின் (Safety Features) தொகுப்பு ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஏராளமான கார்களில் தற்போது அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. எனவே டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும், அடாஸ் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் டாடா பன்ச் காரில் கூடிய விரைவில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு அறிமுகம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சரி, மிகவும் விலை குறைவான டாடா பன்ச் காரில் எதற்காக அடாஸ் வசதி? என நீங்கள் நினைக்கலாம்.

டாடா பன்ச் கார் ஏற்கனவே மிகவும் பாதுகாப்பானது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இது குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்றுள்ளது.
இருப்பினும் பன்ச் காரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரும்புகிறது. இதன் காரணமாகவே டாடா பன்ச் காரில் அடாஸ் வசதி வழங்கப்படவுள்ளது. அத்துடன் பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனை விதிமுறைகள் வரும் காலங்களில் இன்னும் கடுமையாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய விதிமுறைகளின்படி சிறப்பாக செயல்பட்டு 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றாலும், டாடா பன்ச் காரில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு இடம்பெறுவது கட்டாயம். இது போன்ற காரணங்களால்தான், விலை குறைவான பன்ச் காரில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிநவீன அடாஸ் வசதியை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடாஸ் வசதியுடன் கூடிய டாடா பன்ச் கார் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் என 2 வெர்ஷன்களிலும் தொடர்ச்சியாக பல்வேறு அப்டேட்களை செய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








