ஜனநாயகனோ, பராசக்தியோ இல்ல... இந்த கார்தான் பொங்கல் வின்னர்... டாடா நானோ மாதிரி குறைவான விலையில் வருது...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வரும் ஜனவரி 13ம் தேதி (January 13) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டீசர் வீடியோக்களை (Teaser Videos) தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு புதிய டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

Tata Punch Facelift Turbo

இந்த டீசர் வீடியோவின் மூலமாக, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், புதிய டர்போ இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) மட்டுமே வழங்கப்படுகின்றன.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய டீசர் வீடியோவில், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், டர்போ இன்ஜின் வழங்கப்படுவதற்கான பேட்ஜ் பின் பகுதியில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த பேட்ஜ் மூலமாகதான், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், டர்போ இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tata Punch Facelift Touchscreen

தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின்கள் உடன் சேர்த்து, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது. இந்த டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 118 பிஹெச்பி மற்றும் 170 என்எம் டார்க் ஆக இருக்கும். இது மற்ற 2 இன்ஜின் ஆப்ஷன்களையும் விட, அதிக பவர் அவுட்புட் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் டாடா பன்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் உடனும்,5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மறுபக்கம் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற அதிநவீன வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், கூல்டு க்ளவ் பாக்ஸ், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளையும், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டிருக்கும் என உறுதியாக நம்பலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.75 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டும்தான் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஆகிய கார்களுக்கு எல்லாம், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அதிநவீன வசதிகள் உடன் கூடிய, அதே நேரத்தில் ஓரளவிற்கு விலை குறைவான ஒரு மைக்ரோ எஸ்யூவி ரக காரை வாங்குவது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, January 5, 2026, 12:00 [IST]
English summary
Tata punch facelift turbo petrol engine teaser video expected price features and more
மேலும்... #tata motors #Pongal 2026 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+