மாருதிக்கு சிம்ம சொப்பனமாக மாற போகும் விலை குறைவான டாடா கார்! மொத்த மார்க்கெட்டையும் மிரள விட போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift). இது தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்திய சாலைகளில் நீண்ட காலமாகவே டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட், சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த கார் தற்போது விற்பனைக்கு வர தயாராகி விட்டது.

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் ஜனவரி 13ம் தேதி (January 13), அறிமுகம் செய்யப்படும் என, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் எப்படி இருக்கும்? என்பது தற்போதே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tata Punch

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புற மற்றும் வெளிப்புற புகைப்படங்கள் தற்போது, tatapunchofficial இன்ஸ்டாகிராம் தளத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைன் (Design) முற்றிலும் புதிதாக உள்ளது.

அதாவது க்ரில் அமைப்பு தற்போது 'ஸ்லிம்' ஆக உள்ளது. அதேபோல் பகல் நேர விளக்குகள் புதிய டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் பக்க பம்பர் மற்றும் கனமான பிளாஸ்டிக் க்ளாடிங் ஆகியவை, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, மிகவும் கம்பீரமாக காட்டுகின்றன.

Tata Punch Seats

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின் பகுதியில் வழங்கப்பட்டுள்ள கனெக்டட் எல்இடி டெயில்லேம்ப்களும் புதியவைதான். ஒட்டுமொத்தத்தில் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைன், சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், 'ஃப்ரெஷ்' ஆக உள்ளது.

அதேபோல் உட்புறமும் தற்போது விசாலமாகவும், அதிநவீனமான ஒன்றாகவும் காட்சியளிக்கிறது. இங்கே 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டச் அடிப்படையிலான க்ளைமேட் கண்ட்ரோல் பேனல் போன்ற வசதிகள் (Features) எல்லாம் இடம்பெற்றுள்ளன.

இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள், சன்ரூஃப், இலுமினேட்டட் டாடா லோகோ உடன் கூடிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் போன்ற வசதிகளும், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) வருவோம்.

டாடா பன்ச் கார் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனையிலேயே முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. அப்படி இருக்கும்போது, இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளை எல்லாம் கொண்டிருக்கும்.

செயல்திறனை பொறுத்தவரையில், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், முதல் முறையாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் தொலை தூர நெடுஞ்சாலை பயணங்களும், ஓவர்டேக் செய்வதும், முன்பை காட்டிலும் மிகவும் எளிமையாக இருக்கும்.

இதுதவிர தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் + சிஎன்ஜி ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களும் (Engine Options), டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், தொடர்ந்து வழங்கப்படும்.

இதில் பெட்ரோல் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும், பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 5.75 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட், போட்டி மாடல்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களுக்கு எல்லாம், டாடா பன்ச் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 6, 2026, 23:07 [IST]
English summary
Tata punch facelift unveiled ahead of january 13 launch check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+