அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி கார்கள்! விலை, வசதிகள், இன்ஜின், கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் என முழுமையான தகவல்கள்!

இந்தியாவில் தற்போது எஸ்யூவி (SUV) புயல் வீசி கொண்டுள்ளது. இதில் சிக்கி, ஏராளமான ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் செடான் (Sedan) கார்கள் காணாமல் போய் விட்டன. இருப்பினும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த அத்தனை கார்களும் விற்பனையில் ஜொலிப்பதில்லை. ஒரு சில கார்கள்தான் எஸ்யூவி செக்மெண்ட்டை தூக்கி நிறுத்தி கொண்டுள்ளன.

இதில், 4 முக்கியமான எஸ்யூவி கார்கள் பற்றிய தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இவை நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியலில் (Top 10 SUVs June 2026) முதல் 4 இடத்தை பிடித்தவை ஆகும். சரி, வாருங்கள். செய்திக்குள் செல்லலாம்.

2026 Tata Punch EV

டாடா பன்ச் (Tata Punch): நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 10,446 டாடா பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 21,006 டாடா பன்ச் கார்கள் விற்பனையாகியுள்ளன.

அதாவது இம்முறை 10,560 டாடா பன்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா பன்ச் கார் விற்பனையில் 101.09 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. டாடா பன்ச் கார் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 2 வெர்ஷன்களின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்களும் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இதுவே டாடா பன்ச் காரின் இந்த மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் ஆகும். டாடா பன்ச் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த ஜனவரி மாதமும், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த பிப்ரவரி மாதமும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

டாடா பன்ச் காரின் ஐசி இன்ஜின் மற்றும் அதன் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

டாடா பன்ச் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி ஆகியவை ஆகும்.

இதில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி ஆகிய இன்ஜின்கள் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box) கொடுக்கப்பட்டுள்ளன.

மறுபக்கம் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், 30 kWh மற்றும் 40 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 365 கிலோ மீட்டர் மற்றும் 468 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) 5.70 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 9.69 லட்ச ரூபாயாக இருக்கிறது.

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை பாஸ் (BaaS) முறையிலும் வாங்கலாம். இந்த முறையை தேர்வு செய்யும்பட்சத்தில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் பாஸ் முறையை தேர்வு செய்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 2.6 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

Tata Nexon

டாடா நெக்ஸான் (Tata Nexon): நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியலில் டாடா நெக்ஸான் 2வது இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 11,602 நெக்ஸான் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 18,335 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இம்முறை 6,733 டாடா நெக்ஸான் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா நெக்ஸான் கார் விற்பனையில் 58.03 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

டாடா பன்ச் போலவே, டாடா நெக்ஸான் காரும், ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாடா நெக்ஸான் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும் அடாஸ் (ADAS) பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் போன்ற வசதிகளும் 2 வெர்ஷன்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் + சிஎன்ஜி என 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் டிசிஏ என மொத்தம் 4 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் கொடுக்கப்படுகிறது.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 7.39 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 12.49 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் பாஸ் கிடையாதென்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Mahindra Scorpio N

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio): நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 12,740 ஆக இருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 14,097 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது இம்முறை 1,357 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 10.65 சதவீத வளர்ச்சி ஆகும். மஹிந்திரா ஸ்கார்பியோ காரானது, மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) என மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், சன்ரூஃப் மற்றும் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு உள்ளிட்ட வசதிகள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில், 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 2 இன்ஜின்கள் உடனும் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 13.37 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 13.49 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

Maruti Suzuki Fronx Front View

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): இந்தியாவில் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 9,815 ஆக இருந்த மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 13,135 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது இம்முறை 3,320 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 33.83 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி என 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் 1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 6.85 லட்ச ரூபாயாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிதாக ஒரு எஸ்யூவி ரக காரை வாங்குவது குறித்து யோசித்து கொண்டுள்ளவர்களுக்கு இந்த செய்தி உதவும் என நம்புகிறோம். இங்கே ஒரு விஷயத்தை நாங்கள் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். இந்த பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காரும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் உதிரி பாகங்களை சப்ளை செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஹூண்டாய் க்ரெட்டா காரின் உற்பத்தி கடந்த ஜூன் மாதம் வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது. எனவே விற்பனை குறைந்து, ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. மற்றபடி இதுவும் அதிகமாக விற்பனையாகும் ஒரு எஸ்யூவி கார்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Article Published On: Friday, July 10, 2026, 17:27 [IST]
English summary
Tata punch nexon mahindra scorpio n classic maruti suzuki fronx price features engine gear box
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X